×

ரீமேக்கை உறுதி செய்தி திரிஷ்யம் - 2 படக்குழு... யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரிஷ்யம் - 2 படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 
 
 

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டடித்த படம் திரிஷ்யம். இந்தப் படத்தின் மாஸ் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. ரீமேக் பதிப்பும் ரசிகர்களிடம் பெரு வெற்றியைப் பெற்றது. 


இதைத் தொடர்ந்து திரிஷ்யம் - 2 படம் தற்போது மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த இரண்டாம் பாகம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. 


இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முதல் பாகத்தைப் போலவே வெங்கடேஷ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. முதல் பாகத்தை உருவாக்கிய ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் வெங்கடேஷ் தவிர மீனா, நதியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மார்ச் 1-ம் தேதி பூஜையுடன் மார்ச் 5-ம் தேதி தொடங்கி 50 நாட்கள் ஷூட்டிங் ஒரே ஷெட்யூலில் முடிக்கப்படுகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்கை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா மற்றும் மலையாளத்தில் தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். 


தமிழில் முதல் பாகம் பாபநாசம் என்ற பெயரில் கமல், கௌதமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வெற்றிபெற்றது. அதேபோல், தமிழில் இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News