
Cinema News
ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!
Published on
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அந்த படத்தில் நடித்த பாபி சினிமாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதே கிடைத்தது.
ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அதன் பின்னர் தனுசை வைத்து ஜகமே தந்திரம் படத்தைக் கொடுத்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.
இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..
இளம் இயக்குனராக கடகடவென முன்னேறி வந்த கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் மீண்டும் தனக்கு வெற்றி கொடுத்த ஜிகர்தண்டா படத்தை தூசி தட்ட ஆரம்பித்துள்ளார். ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி அந்த படத்தின் டீசர் வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஆனால் அந்த அறிவிப்பு போஸ்டரிலேயே ஒட்டுமொத்த கதையும் தெரிந்துவிட்டது என ரசிகர்கள் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர். ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் இயக்குனராகவும் பாபி சிம்ஹா கேங்ஸ்டர் ஆகவும் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: எல்லாம் ஓகே அது என்ன சார் டிராமா தாடி!.. விஜய் ஆண்டனியின் ரத்தம் ட்ரெய்லரில் ஒரு பீஸ் மிஸ்ஸிங்!..
இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும் நடித்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஜிகர்தண்டா திரைப்படத்தை போலவே இந்தப் படத்திலும் எஸ்ஜே சூர்யா ராகவா லாரன்ஸை ஏமாற்ற போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. நிலையில் படத்தின் டீசர் அறிவிப்பு போஸ்டரிலேயே ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தைப் பார்க்கப் போகின்றனர் என்பதை தில்லாக கார்த்திக் சுப்புராஜ் சொல்லியிருக்கும் நிலையில், படத்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங் தூள் கிளப்பும் என கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...