Categories: Cinema News latest news

தயாரிப்பாளருக்கே டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்!!… ஆடியோ லாஞ்சில் தில் ராஜுவுக்கு ஏற்பட்ட சோகங்கள்…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக அஜித்தின் “துணிவு” திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதால் ஏற்கனவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Varisu Audio Launch

“வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் வழக்கம்போல் ஒரு குட்டி ஸ்டோரியை கூறியிருக்கிறாராம். ஆனால் விஜய் இந்த விழாவில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அந்த விழாவில் விஜய் ரசிகர்களால் அங்குள்ள இருக்கைகள் சேதம் அடைந்ததாகவும் அதற்கான அபராத தொகையை தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் வசூலிக்கப்போவதாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் நிர்வாகம் கூறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சத்யராஜ் ஒரே நாளில் நடித்துக்கொடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம்… நம்பவே முடியலையேப்பா!!

Dil Raju

இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கே டிக்கெட் கிடைக்காமல் இருந்ததாம். அதாவது ஆடியோ வெளியீட்டு விழா ஏற்பாடு செய்தபோது, தில் ராஜூவுக்கு எத்தனை அனுமதி சீட்டுக்கள் வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டார்களாம்.

“சென்னையில் நமக்கு அவ்வளவாக நண்பர்கள் இல்லையே” என்று நினைத்துக்கொண்ட தில் ராஜூ, 20 அனுமதி சீட்டுக்கள் போதும் என கூறிவிட்டார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் ஆந்திராவில் உள்ள பல்வேறு நண்பர்கள் தில் ராஜுவிடம் அனுமதி சீட்டு வேண்டும் என கேட்கத் தொடங்கிவிட்டனராம். ஆதலால் கடைசி நேரத்தில் ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் அனுமதி சீட்டுக்கள் இல்லை என கூறிவிட்டனராம். இதனை தொடர்ந்து தனது சிபாரிசால் தனது நண்பர்களை விழாவிற்குள் அழைத்து வந்து உட்காரவைத்தாராம் தில் ராஜூ.

Arun Prasad
Published by
Arun Prasad