Categories: Cinema News latest news

சூர்யா பின்னாடி திரியும் பிரபல இயக்குனர்.! இவருக்கு இந்த நிலைமையா ?!

ஒரு காலத்தில் சூர்யாவின் மார்க்கெட் ஒரு பெரிய இடத்திற்கு வர முயன்று கொண்டிருந்த போது அவரை அடுத்தடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உதவியவர் இயக்குனர் பாலா. நந்தா, பிதாமகன் என அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்து திறமையான நடிகராக்கி, மார்க்கெட்டை உயர்த்திவிட்டார் இயக்குனர் பாலா,

பாலாவின் சமீபத்திய திரைப்படங்களான தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து வெளியான வர்மா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

இதையும் படியுங்களேன் – உதயநிதி வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் வடிவேலு.! காரணம் இதுதானா.?!

இதனால், அடுத்து பெரிய ஹீரோவை இயக்கி பெரிய ஹிட் கொடுத்து மீண்டும் திறமையான இயக்குனராக வர வேண்டும் என இயக்குனர் பாலா போராடி கொண்டிருக்கிறார். இவர் அடுத்ததாக சூரியவை இயக்க அவரிடம் கதை கூறி வைத்திருந்தார்.

எந்த கதை ஓகே ஆகிறதோ அந்த கதையை படமாக்க அவர் திட்டமிட்டார். அதே போல, டிசம்பரில் ஒரு கதை கூறினாராம். அதன் பிறகு அடுத்தடுத்து சில கதைகளை சூர்யாவிடம் கூறியுள்ளாராம். அதில் எந்த கதை ஓகே ஆகும், எப்போது ஷூட்டிங் போகலாம் என பாலா காத்துக்கொண்டிருக்கிறாராம்.

Manikandan
Published by
Manikandan