Categories: Cinema News latest news throwback stories

அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது முரளிதான்… 25 வருடம் கழித்து வெளிவந்த உண்மை….

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் போன்ற நல்ல படங்களை இயக்கி நல்ல இயக்குனராக தற்போது வரையில் அறியப்படுபவர் சேரன். இவர் இயக்குனர் மட்டுமின்றி பல நல்ல படங்களில் சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார்.

இவர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் தான் பாரதி கண்ணம்மா. இந்த படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தின் கிளைமாக்சில் பார்த்திபனுக்கும், சேரனுக்கும் முரண்பாடுகள் இருந்தது, அது ஒரு சிறிய பஞ்சாயத்து ஆனதெல்லாம் தனிக்கதை.

இந்த படம் பற்றிய வேறு சில தகவல்களை இயக்குனர் சேரன் அண்மையில் பகிர்ந்துள்ளார். அதாவது, ‘ இந்த படத்தில் சேரன் நடிக்க வைக்க நினைத்தது மறைந்த நடிகர் முரளியை தானாம். ஆனால், அப்போது அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் பார்த்திபனை ஹீரோவாக வைத்து படத்தை எடுத்து முடித்தாராம்.

இதையும் படியுங்களேன் – நன்றி மறந்துவிட்டாரா ஷங்கர்.?! இந்த சினிமாவில் இதெல்லாம் ரெம்ப சாதாரணம்.!

நடிகர் முரளி மிகவும் நல்ல மனிதராம். ஒரு இயக்குனர் படவாய்ப்பு இல்லாமல் இருந்தால் அவரால் தாங்க முடியாதாம். இயக்குனர் கஷ்டப்படுவது பிடிக்காதாம். வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் உடனே உதவுவாராம். பசியோடு இருந்த பலருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளாராம். அதானல் தான் சேரன் தனது இரண்டாவது படத்தை முரளியை வைத்து தான் இயக்குவேன் என கூறி பொற்காலம் எனும் நல்ல ஹிட் படத்தை முரளிக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார் இயக்குனரும் நல்ல மனிதருமான சேரன்.

Manikandan
Published by
Manikandan