per
Director Perarasu: தமிழ் சினிமாவில் ஊர்ப்பெயர்களை கொண்டு படத்தின் பெயர்களை வைத்து படம் எடுப்பதில் முக்கிய இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் பேரரசு. இவரின் படங்களில் காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என முழுவதும் கலந்த ஒரு மசாலா படமாகவே இருக்கும்.
படத்தை இயக்குவதை மட்டும் செய்யாமல் பாடல்களை எழுதுவது இயக்கும் படங்களில் சிறு தோற்றத்தில் வந்து நடித்துக் கொடுக்கவும் செய்வார்.இவர் விஜயை வைத்து திருப்பாச்சி மற்றும் சிவகாசி போன்ற படங்களை எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: நானும் விஜயும் ஃபிரண்டா? என்ன மைக்கேல் ஜாக்சன்? தளபதி 68ல் நடிக்கிறீங்க! – இப்படி சொல்லிட்டீங்க?
விஜயை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டியதற்கு பேரரசுவுக்கும் முக்கிய பங்கு உண்டு.இவர் சமீபத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். லியோ படத்தை பார்த்தேன். அதில் விஜயின் நடிப்பு மிகவும் பாராட்டக் கூடியதாகவே இருக்கிறது.
அதுவும் பார்த்திபன் விஜயை யாராலும் மறக்க முடியாது. த்ரிஷாவும் இரு குழந்தைகளுக்கு அம்மா எனும் போது தயங்காமல் வந்து நடித்துக் கொடுத்ததற்கு த்ரிஷாவுக்கும் ஒரு பெரிய வணக்கம் என்றும் பேரரசு கூறினார். மேலும் சமீபத்தில் லோகேஷ் ஒரு பேட்டியில்,
இதையும் படிங்க: ஓவரா எதிர்பார்த்து ஒன்னும் இல்லன்னா செஞ்சிருவாங்க!.. லியோ பார்த்து அலார்ட் ஆன ரஞ்சித்!..
லியோ படத்தில் மன்சூர் அலிகான் சொல்லும் அந்த ப்ளாஷ் பேக் முற்றிலும் ஃபேக் என்று சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதை பற்றி பேரரசு கூறும் போது ஒரு படத்தில் வரும் ப்ளாஷ் பேக்கை யாராது வசனம் மூலம் சொல்கிறார் என்றால் அதில் போலித்தனம் இருக்கு என்று சொல்லலாம்.
ஆனால் ப்ளாஷ் பேக்கை ஒரு படத்தில் விஷுவலாக காட்டும் போது அது முற்றிலும் சத்தியம்தான். அதில் உண்மை இல்லை என்று சொல்வது சினிமாவிற்கு சரிபடாது என்று பேரரசு கூறினார். மேலும் விஷுவலாக பார்க்கும் போது ரசிகர்களும் அதை நம்பித்தான் ஆக வேண்டும் . அதை ஏமாற்ற முடியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கோடியை மட்டும் சுருட்ட தெரியுது! எங்க நிலைமையையும் யோசிங்க நயன் – பரிதவிக்கும் படக்குழு
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…