Categories: Cinema News latest news

கூல் சுரேஷ் பிரச்சனை பண்ண தொகுப்பாளினிக்கிட்ட விஜய் பட இயக்குனர் பண்ண அலப்பறையை பார்த்தீங்களா!..

மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி உள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியிடம் நடிகர் கூல் சுரேஷ் மேடையில் அநாகரிகமாக அந்தப் பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரது கழுத்தில் மாலை போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேடையிலேயே உடனடியாக மாலையை கழட்டி போட்டு கூல் சுரேஷை தொகுப்பாளினி ஐஸ்வர்யா முறைத்த காட்சிகள் நேஷ்னல் மீடியாவிலேயே வைரல் ஆனது.

இதையும் படிங்க: அப்பா, அம்மாவுக்கு வீடு கட்ட நினைச்சது தப்பா!.. பாபி சிம்ஹாவை ரியல் அழுகினி குமாரா மாத்திட்டாங்களே!..

சம்பவ இடத்திலேயே, மன்சூர் அலிகான் அந்த தொகுப்பாளினியிடம் கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க சொன்னார். மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ் தனியாகவும் ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனால், இது முதல் முறை அல்ல என்றும் பலமுறை தன்னை கூல் சுரேஷ் சீண்டி வந்ததாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா அளித்த பேட்டியில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: என்னை நடிகை மட்டும்தான்னு நினைச்சீங்களா?!.. அசோக் செல்வன் மனைவி பற்றிய ஆச்சர்ய தகவல்!…

இந்நிலையில், தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் மைக் பிடித்து பேச வருபவர்களுக்கு அவர்களது உயரத்திற்கு ஏற்ப மைக்கை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்து வரும் ஐஸ்வர்யா, இயக்குனர் பேரரசு பேசும் போது அவர் அருகில் வரவில்லை.

இதை கவனித்த விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களை இயக்கிய பேரரசு ”நான் மட்டும் இளிச்சவாயனா.. வந்து எனக்கும் சரி பண்ணிக் கொடு” என கேட்கும் வீடியோவை தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஃபாலோ செய்து அவரது போட்டோக்களுக்கு மோசமான கமெண்ட்டுகளை போட ஆரம்பித்துள்ளார்களாம்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/Cw0LTAIRv8v/?utm_source=ig_web_copy_link

Saranya M
Published by
Saranya M