×

நடிகரால் அப்செட்டான இயக்குனர்... புது காரணம் சொல்லும் படக்குழு

ஸ்டார் கேஸ்டோடு சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட படம் முடியாமல் இருக்க என்ன காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. 
 
நடிகரால் அப்செட்டான இயக்குனர்... புது காரணம் சொல்லும் படக்குழு

தமிழின் முன்னணி இயக்குனர் - முன்னணி நடிகர், இது மட்டுமல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் என அந்த மெகா பட்ஜெட் படத்தின் அறிவிப்பு வந்தபோதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறது. தொடர்ந்து பல நாடுகளுக்குப் பறந்தும் படக்குழு ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தியது. 

அதன்பின்னர் யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஷூட்டிங் பாதியில் நின்றது. என்னதான் பிரச்சனை என தயாரிப்பாளர் முட்டி மோதி பட வேலைகளைப் பார்த்து வந்தார். இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டீசர் வெளியானது. ஸ்டைலிஷான தோற்றத்தில் நாயகன் இருந்த அந்த டீசரும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

சூட்டோடு சூட்டாக படத்தின் பிஸினஸை முடித்துவிடலாம் என தயாரிப்பாளர் காத்துக் கொண்டிருக்க ஷூட்டிங் முழுமையாக முடியல. இன்னும் ஒண்றிரண்டு நாள் பாக்கி இருக்கு என்றிருக்கிறார்கள். நாயகனும் பல படங்களில் பிஸியாகிவிட்டார். இயக்குனரும் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். 

இந்த சர்ச்சை நீறுபூத்த நெருப்பாக உழன்று கொண்டிருந்த நிலையில், நாயகன் தரப்பிலிருந்து ஷூட்டிங்குக்குத் தயார் என்று இயக்குனருக்கு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டைரக்டர் கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். இதனால், டைரக்டருக்குப் படத்தை முடித்துக் கொடுக்க ஆர்வமில்லை என்று பேசப்பட்டது. ஆனால், நாயகன் மேல இருக்க அதிருப்தியால்தான் டைரக்டர் எதுவும் பேசாம அமைதியாக இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News