Categories: Cinema News latest news throwback stories

மலேசியா வாசுதேவனுக்கு விடியலை கொடுத்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?

ஒவ்வொரு கலைஞனுக்கும் அவனது கலை அங்கீகரிக்கப்படும்போது தான் விடியல் கிடைக்கும். அதுவரை அவன் கற்றுக்கொண்ட வித்தைகள் எவ்வளவு இருந்தாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அது மங்கிப் போய் தான் இருக்கும். அங்கு பிரகாசம் இருக்காது. அது கலைஞர்களின் வாழ்க்கையில் பெரும்பாலும் நடக்கும். அந்த வகையில் பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனுக்கும் நடந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போமா…

இதையும் படிங்க… சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்

இப்படி மங்கிப் போய் கிடக்கும் கலைஞன் விடியலுக்குள் வர வேண்டுமானால் ஒரே வழி தான் உள்ளது. அது தனக்கு வரும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வது தான். அது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வறண்டு போய்க்கிடந்தது. 1973ல் இருந்தே மலேசியா வாசுதேவன் பாடி வந்துள்ளார். ஆனால் சொல்லும்படி எதுவும் அமையவில்லை.

அப்போது தான் இளையராஜா அவரது பயணத்தில் வந்தார். அவர் மலேசியா வாசுதேவனை அழைத்தார். டேய் வாசு ஒரு டிராக் இருக்கு. அது கமலுக்குப் பாடணும். நீ சரியா பாடினா நல்ல பிக்கப் ஆகிடலாம். நல்லா பாடுன்னாரு. அதுதான் 1977ல் வெளியான பதினாறு வயதினிலே. செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாட்டு. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாட்டு. இந்த ரெண்டுமே எஸ்.பி.பி. பாட வேண்டியவை.

16 vayathinile

ஆனால் அவர் ஏனோ வரவில்லை. அது பாரதிராஜாவுக்கு டென்சனாக்கியது. இளையராஜாவோ பரவாயில்லை. அவர் வரலைன்னா நான் வேற ஒருவரை வைத்து இப்போதைக்கு டிராக் எடுக்கறேன்னு சொன்னார். நாளை எஸ்பிபி வந்ததும் அவரைப் பாடச் சொல்வோம் என்றார். அதை இளையராஜா சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மலேசியா வாசுதேவனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தாராம். பாரதிராஜாவும் அரை மனதாய் சம்மதித்தார்.

ஆனால் மலேசியாவோ பாடலைப் பிரமாதமாகப் பாடி அசத்தி விட்டார். இது பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதுவே இருக்கட்டும்னு சொல்லிவிட்டார். அப்புறம் என்ன அவர் காட்டில் அடை மழை தான். தொடர்ந்து சிவாஜிக்கும் படிக்காதவன் படத்தில் பாடி விட்டார். ஒரு கூட்டுக்கிளியாக என்று. அந்தவகையில் இளையராஜா தான் மலேசியா வாசுதேவனை சினிமா உலகில் அடையாளப்படுத்தினார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v