Categories: Cinema News latest news throwback stories

டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்!.. பயில்வான் சொன்ன ரகசியம்!..

சமீபத்தில் மறைந்த வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி குறித்து பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

48 வயதில் அகால மரணம் அடைந்தார் டேனியல் பாலாஜி. இவர் ஒரு சிறந்த வில்லன் நடிகர். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு சரிசமமாக வந்து வில்லத்தனத்தில் அசத்தியிருப்பார். எந்த ஒரு படமாக இருந்தாலும் ஹீரோவுக்கு சமமாக வில்லன் இருந்தால் தான் அந்தப்படம் வெற்றி அடையும். சித்தி தொடரில் வந்த 2 வாரங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

பாலாஜி என்பது ஒரிஜினல் பெயர். அலைகள் தொடரில் வில்லனாக நடித்தும் அவரது பெயர் போடவில்லையாம். அப்போ அந்தத் தயாரிப்பு குழுவினர் கதாபாத்திரத்துடன் இணைத்து டேனியல் பாலாஜி என்று போட்டிருக்கிறோம் என்றார்கள். இனி இந்தப் பெயர் தான் உங்களுக்கு நிலைத்து நிற்கும் என்றார்கள்.

அப்போது அரைகுறையாகத் தான் அந்தப் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டாராம். அதன்பிறகு சினிமா உலகில் எல்லோரும் அவரை அப்படியே அழைத்தனர். கௌதம் மேனனின் காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தார். எடுத்த எடுப்பிலேயே உலகநாயகன் கமலுக்கே டப் கொடுக்கும் வகையில் வேட்டையாடு விளையாடு படத்தில் டெரர் வில்லனாக வந்தார்.

Kamal, Daniel balaji

அந்தக் கேரக்டருக்கு வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அனாயாசமாக நடித்து அசத்தியிருந்தார் டேனியல் பாலாஜி. எப்போதாவது நண்பர்கள் துரோகியாக மாறுவார்கள். ஆனால் எப்போதுமே உறவினர்கள் துரோகியாக மாறுவார்கள். அதனால் தான் எனக்கு ப்ரண்ட்ஸ்சும் கிடையாது. ரிலேட்டிவ்சும் கிடையாதுன்னு வசனம் பேசுவாரு.

இவர் தமிழக அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தவர். நடிகர் முரளி இவரது பெரியப்பா மகன். ஆரம்ப காலத்தில் இருவரும் நெருக்கமான நண்பர்களாகவே இருந்தனர். முரளியின் மார்க்கெட் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தாராம் டேனியல் பாலாஜி. ஏன்னா அண்ணனைப் போய்ப் பார்த்தால் சினிமா வாய்ப்பு கேட்டு வந்ததாக எண்ணக்கூடும் என்று நினைத்தாராம்.

இதையும் படிங்க… தேவர் மகனை இயக்கியது கமல்ஹாசனா? பரதனா?.. நாசர் சொல்ல வருவது என்ன?..

அவர் கண் தானம் செய்ததால் இறந்தும் வாழ்ந்து வருகிறார். இவர் கடைசி வரை திருமணமே ஆகாமல் இருந்துள்ளார். காரணம் ஜாதகமே பொருந்தவில்லையாம். 21 வயதில் இருந்தே பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். கடைசியில் பொருந்திய அந்த 2 ஜாதகமும் ஏற்கனவே நிச்சயமாகி விட்டது என்று சொல்லி விட்டார்களாம். அதனால் அவரது அம்மாவிடம் நான் எப்போதும் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v