Connect with us
saavi

Cinema News

பச்ச அயோக்கியத்தனம்! சாவித்ரியை காப்பாத்தவே இப்படி பண்ணாங்க – உண்மையா சொல்லவா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிய நடிகையாக இருந்தவர் சாவித்ரி. நடிகையர் திலகம் என்ற பட்டத்திற்கு தகுந்தாற் போல நடிப்பில் கொடி கட்டி பறந்தார் சாவித்ரி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட சாவித்ரி தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக காணப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என  பிற மொழி படங்களிலும் தான் யார் என்பதை நிரூபித்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அனைத்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் அபிமானங்களை பெற்றார்.

இதையும் படிங்க : லியோ விஜய்க்கு வந்த ஆயிரத்தி ஒன்னாவது கவலை!.. திருமண நாளில் கூட நிம்மதியா இருக்க முடியலையே!..

நடிகர் ஜெமினிகணேசனுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்ட சாவித்ரி சில காலம் ஜெமினியுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார். அதன் பின் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட அதன் பின் என்ன நடந்தது என்பதை மகாநடி படத்தின் மூலம் விவரித்திருப்பார்கள்.

தெலுங்கில் உருவான மகாநடி திரைப்படம் தமிழிலும் சக்க போடு போட்டது.ஆனால் அந்தப் படத்தில் ஜெமினியின் கதாபாத்திரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் சில காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அதை பார்த்த ஜெமினி குடும்பத்தாரே அவர் அப்படி இல்லை என்று வாதிட்டனர்.

இந்த நிலையில் பிரபல திரை விமர்சகரும் மருத்துவருமான காந்தராஜ் உண்மையிலேயே சாவித்ரியால் தான் ஜெமினி மிகவும் பாதிக்கப்பட்டார் என்றும் சாவித்ரி ஜெமினியை பற்றி எனக்கு தான் அதிகம் தெரியும் என்றும் படம் வந்த போது கூட யாரை கேட்டு இப்படியெல்லாம் எடுத்தீர்கள் என்று கேட்டதாகவும் காந்த்ராஜ் கூறினார்.

இதையும் படிங்க : ஆல் இன் அழகுராஜாவா மாஸ் காட்டப் போகும் வடிவேலு! ‘சந்திரமுகி 2’வில் இப்படி ஒரு திருப்பமா?

மேலும் அந்தப் படத்தில் ஜெமினியை அப்படி காட்டியதெல்லாம் பச்ச அயோக்கியத்தனம், தெலுங்கு காரர்கள் சாவித்ரியை நல்லவராக காட்டவே அப்படி எடுத்தார்கள் என்றும் கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top