லியோ விஜய்க்கு வந்த ஆயிரத்தி ஒன்னாவது கவலை!.. திருமண நாளில் கூட நிம்மதியா இருக்க முடியலையே!..

நடிகர் விஜய் சந்தோஷமாக திருமண நாளை கூட கொண்டாட முடியாத அளவுக்கு சன் பிக்சர்ஸ் நேரம் பார்த்து சரியாக ஜெயிலர் படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து விட்டது.

பீஸ்ட் படத்துக்கு வசூல் நிலவரத்தை அறிவிக்காத சன் பிக்சர்ஸ் இந்த முறை ஜெயிலர் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் வைப்பது என்ன, பாக்ஸ் ஆபிஸ் வசூல் சொல்வது என்ன என அனிருத்தாவே மாறி அலப்பறையை கிளப்பி வருகிறது.

இதையும் படிங்க: எல்லாரும் அடங்குங்க!.. இதான் ஜெயிலர் ரியல் கலெக்‌ஷன்!.. சன் பிக்சர்ஸ் கொடுத்த அப்டேட்!…

ஜெயிலர் வசூலால் விஜய் டென்ஷன்:

375 கோடி வசூல் முதல் வாரத்தில் சொல்லும் போதே வாரிசு பட ஆயுசு வசூலே முடிந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் தற்போது 525 கோடி என்றும் அதன் அருகே விஜய் கழுத்தில் உள்ள சிலுவை போல பிளஸ் சிம்பலும் போட்டு அதிர வைத்து விட்டது சன் பிக்சர்ஸ்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முந்த வேண்டும் என்கிற ஒரு கட்டாயம் மட்டும் நடிகர் விஜய்யின் லியோவின் கழுத்தை நெறிக்கப் போவதில்லை என்றும் கூடவே விரைவில் வெளியாக உள்ள அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்பட வசூல் மற்றும் அதனை தொடர்ந்து செப்டம்பர் இறுதியில் வெளியாக உள்ள பிரபாஸின் சலார் பட வசூல் என ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்களின் வசூல் அடுத்தடுத்து அடுக்கி நிற்கப் போகின்றன.

இதையும் படிங்க: ஜெய்பீம் படத்துக்கு நோ தேசிய விருது!.. நடிப்பின் நாயகனை வச்சு செய்யும் விஜய் ஃபேன்ஸ்!..

பெரிய போட்டியே இருக்கு:

இந்நிலையில், லியோ அதையெல்லாம் முறியடித்து பீஸ்ட்டுக்கு வேட்டு வைத்த கேஜிஎஃப் 2 வசூலுக்கும் பதிலடி கொடுத்து ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டும் என நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் ஹைப்பை எகிற வைத்து வரும் அளவுக்கு லியோ படம் இருக்குமா என்கிற டென்ஷனே நடிகர் விஜய்க்கு அதிகமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பெரியளவில் வசூல் வேட்டையை லியோ படம் பண்ணுவதற்கான பிசினஸ் மற்றும் புரமோஷனை செய்ய தயாரிப்பு நிறுவனமும் ஏகப்பட்ட திட்டங்களை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடித்தால் அது தமிழ் சினிமாவுக்கே பெரிய விஷயமாக மாறும் என்றும் சினிமா பிரபலங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles
Next Story
Share it