டாக்டர் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மிகுந்த நம்பிக்கையுடன் நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் டான். கல்லூரி கலாட்டாக்களை ஒன்றிணைத்து ஒரு பக்கா கமர்சியல் படமாக இது தயாராகியுள்ளதாம்.
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் அசத்தலான இசையை இப்படத்திற்கு கொடுத்துள்ளார். பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் பிளே லிஸ்டில் டாப் கிளாசில் வந்துள்ளது. இந்த படம் வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. படம் காமெடி, ஆக்சன் நிறைந்த பக்கா கமர்சியல் படம் என்பதை காட்டியுள்ளது. இந்த படம் தமிழில் ஓர் நண்பன் படம் போல முழுக்க முழுக்க கல்லூரி கலாட்டாக்களை மையப்படுத்தி முழுக்க முழுக்க அப்படி இருக்கும் என நினைக்கையில்,
இதையும் படியுங்களேன் – கே.ஜி.எப் ‘மாஸ்’ பிரபலம் திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் திரையுலகம்.!
படம் இதற்கு அப்படியே நேர் மாறாக இருக்குமாம். அதாவது பள்ளி பருவத்தில் இருந்து 30 வயது வரை ஹீரோ எப்படி இருக்கிறான் எனபதை காட்டும்படி இருக்குமாம். அதனால், கல்லூரி காட்சிகள் குறைவாக தான் இருக்குமாம். அதிலும் கிளாஸ் ரூம் காட்சிகள் சுத்தமாக இருக்காது எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது இன்டர்நெட்டில் வைரல் செய்தியாக பார்க்கப்படுகிறது.
டான் படத்தில் கல்லூரி காட்சிகள் அதிகமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…