Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வலிமை அப்டேட் கேட்காதீங்க! கொரோனா முடியட்டும் – போனிகபூர் அறிக்கை

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

903244d48cda3e7b97d9a2d219d76d7f-1

ஏற்கனவே, படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்தனர். வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் ஐடியை டேக் செய்து வலிமை பட அப்டேட்டை கேட்டு நச்சரித்து வந்தனர்.

இந்நிலையில், போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்யவேண்டாம் என எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்

என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top