Connect with us
Kamal, Karthi, Rajni

Cinema News

புதுசா யோசிக்கவே தெரியாதா? இன்னும் அரைச்ச மாவையே அரைச்சி தலைப்பு வைக்கும் இயக்குனர்கள்!

கைதி, விக்ரம், கூலி என்ற படங்களை எல்லாம் பார்க்கும் போது இது போன்ற தலைப்பில் தான் ஏற்கனவே படங்கள் வந்து விட்டதே… இன்னும் ஏன் இதே தலைப்பு என்று கேட்கத் தோன்றுகிறது.

இன்று பல ஹிட் படங்களைக் கொடுத்து மிகப்பெரும் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இப்படி தலைப்பு வைப்பது தான் வேதனை. படங்களின் கதைகள், பாடல்களைத் தான் சுட்டு சுட்டு எடுக்கிறீங்க… தலைப்பையுமா என்று கேட்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் வெளியான ரஜினி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளில் படத்தின் தலைப்பு கூலி என வெளியானது. இது ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் வெளியான படத்தின் பெயர். அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற பாடல் வரிகள் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வந்த ஜகமே தந்திரம் பாடலில் இருந்து சுடப்பட்டது.

Logesh

Logesh

ரஜினிக்கே இப்படியா என்று தான் கேட்கத் தோன்றுகிறது. அதே போல விக்ரம் படத்திற்கான பார்ட் 2 என்று சொல்லிக்கொண்டு தலைப்பையும் அதே பெயரில் வைத்து இருப்பது கமலுக்கும் அல்வாவா என்று கேட்கத் தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தல் என்ற ஒன்லைனை வைத்தே பல படங்களை எடுத்து வருவது இளம் தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலா எனவும் கேட்கத் தூண்டுகிறது.

இளம் இயக்குனராக இருக்கும் லோகேஷ் சமுதாயத்தை சீர்படுத்தும் வகையில் இன்னும் புதுவிதமாக சிந்தித்து எத்தனையோ நல்ல படங்களைக் கொடுக்கலாம். ஆனால் இதைத் தான் இளைஞர்கள் ரசிக்கிறார்கள்… காசு பார்க்கலாம்… வசூலை அள்ளலாம்… கமர்ஷியல் ஹிட் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இப்படி படம் எடுப்பது எந்த விதத்தில் நியாயம்? படத்தில் காட்சிக்குக் காட்சி காட்டப்படும் கன்களும், அரிவாள், கத்தியும் என ரத்த கலாச்சாரம் இளம் உள்ளங்களைப் பாதிக்காதா? கைதி படம் கூட சிரஞ்சீவி படத்தின் டப்பிங் தலைப்பு தான்.

இதையும் படிங்க… இப்படி தலைப்பு வச்சா படம் ஓடாது!.. விஜய்க்கு இப்படி ஒரு ராசி இருக்கு!.. பொங்கும் பிரபலம்…

ஓடக்கூடாதுன்னு நினைச்சு யாருமே படம் எடுக்க மாட்டாங்க. ஆனாலும் படம் ஓடலைன்னா அதுக்குக் காரணம் முழுக்க முழுக்க இயக்குனர்கள் தான். அவர்கள் செய்யும் வேலையை பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக எண்ணாமல் இந்த சமுதாயத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

இந்த லிஸ்டில் மாப்பிள்ளை, வேலைக்காரன், தங்கமகன், கழுகு போன்ற படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் படங்களின் பெயர்களிலும் பழைய படங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top