×

மஞ்சரேக்கரை நீக்கியிருக்க வேண்டாம்…. ஆனால் இதை செய்திருக்கலாம் – முன்னாள் வீரர் ஆதரவு !

சஞ்சய் மஞ்சரேக்கரை வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டாம் என முன்னாள் வீரர் சந்திரசேகர் பண்டிட் தெரிவித்துள்ளார்.

 

சஞ்சய் மஞ்சரேக்கரை வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டாம் என முன்னாள் வீரர் சந்திரசேகர் பண்டிட் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கரை சமீபத்தில் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது. இவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும் வீரர்களை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் வீரரான சந்திரசேகர் பண்டிட் மஞ்சரேக்கருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் பேச்சில் ‘முகத்துக்கு நேராக உண்மை பேசக்கூடிய யாரையும், யாருக்கும் பிடிக்காது. ஒரு வர்ணனையாளராக மஞ்சரேக்கர் பேசும் சில வார்த்தைகள் யாருக்காவது பிடிக்காமல் போயிருக்கலாம். தனது வேலைக்காக, எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் அவரால் பேச முடியாது. மஞ்ச்ரேக்கர் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி..,) 'அட்வைஸ்' செய்தால் போதும், வர்ணனை பணியில் இருந்து நீக்க வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News