×

டிடிவி தினகரனின் வலதுகரம் வெற்றிவேல் மரணம்... அமமுகவினர் சோகம்
 

 

2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ ஆனவர் வெற்றிவேல். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தார். மேலும், ஆளுநரிடமும் கடிதம் கொடுத்தார். எனவே, அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  ஆனால், அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் 2 நாட்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது மரணமடைந்துள்ளார். அவரின் மரணத்திற்கு டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News