இளசுகளிடம் லைக்ஸை அள்ளும் I'm Game-ன் அருகே அருகே பாடல்!
Aug 10, 2026, 18:08 IST
துல்கர் சல்மான் நடித்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படம் 'அயம் கேம்'. இதில் துல்கருக்கு ஜோடியாக 'இதயம் முரளி, டிராகன்' போன்ற படங்களில் நடித்த கயாடு லோஹர் டூயட் பாடி ஆடியுள்ளார்.
இதை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் வெளியானது.
இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. படத்தை வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருக்கிறார்கள்.
தற்போது, இதன் 'அருகே அருகே' என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.