துல்கர் சல்மான் நடிக்கும் ஐ அம் கேம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிக்கும் ஐ அம் கேம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 
iam game

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். தொடர்ந்து பல வெற்றிபடங்களை கொடுத்து வருபவர் இவர். துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இப்படத்தினை மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட்டான  RDX  திரைப்படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான  வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து, ஆண்டனி வர்கீஸ் பெபே,கதிர், கயாடு லோஹர் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் இப்படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

iam game

இந்த நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. 

From Around the web