I'm Game ட்ரெய்லர் எங்கடா?... வெயிட் பண்ணி டயர்டான துல்கர் ரசிகர்கள்!
மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்று (ஜூலை 28-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
துல்கர் சல்மான் தனது ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்கும் வகையில் ஒரு சூப்பர் ப்ளான் போட்டிருந்தார். அதன்படி இவர் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் 'I'm Game' படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சொன்ன நேரத்திற்கு ட்ரெய்லர் வெளியாகவில்லை. பின், இரவு 9 மணிக்கு வெளிவரும் என்று சொல்லப்பட்டது. ரசிகர்களோ வெயிட் பண்ணி டயர்டாகி விட்டார்கள்.
Today’s #ImGame trailer release has been postponed due to a technical glitch. We are working hard to deliver the best possible reveal and will share a new schedule soon. Thank you for your patience and support! pic.twitter.com/TpkiewusZG
— Wayfarer Films (@DQsWayfarerFilm) July 28, 2026
தற்போது, டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
