Categories: latest news television

எதிர்நீச்சல்: பொங்கி எழுந்த ஞானம்….பரிதவிக்கும் ரேணுகா… ஆறுதல் கூறும் நந்தினி…

நேற்றைய எபிசோடில் ஆதிகுணசேகரனிடம் இருந்த போன் வந்த பின் ஞானம், கதிர் ஆகியவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதி குணசேகரனின் அம்மா வீட்டில் பெரிய தலை ஒன்று சாகபோகிறது என்பதை கேள்விபட்டவுடன் அது யாராக இருக்கும் என குழப்பமடைகிறார்.

ஒருவேளை அது அவராகதான் இருக்குமோ என பயப்படுகிறார். ஆனால் கதிர் ஞானம், ஜான்சிராணி அனைவரும் பயப்படவேண்டாம் அண்ணி. நாங்க எல்லாரும்ம் இங்கதான இருக்கோம்…உங்களுக்கு எதுவும் ஆக விடமாட்டோம் என கூறுகிறார். பின் கதிரோ அந்த பெரிய தலை பட்டுதான் என கூறுகிறார்.

இதையும் வாசிங்க:2018-க்கு பதிலா ஆஸ்கருக்கு போக வேண்டிய தமிழ் படங்கள் எதுனு தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க!..

பின் அடுத்த சீனில் ஞானம் மாடியில் நிற்க ரேணுகா அவருக்கு பால் கொண்டு செல்கிறாள். பின் ஞானத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். ஞானம் அவர் அண்ணன் பின்னால் சுற்றி கொண்டிருந்ததாகவும் இப்போது அவர் சொத்து தந்ததால் அவருக்கு ஆதரவாக பேசுவதாகவும் ஞானத்தை குற்றம் சாட்டுகிறார்.

பொறுமையை இழந்த ஞானம் ரேணுகாவை கண்டபடி திட்டிவிட அவளை அடிக்கவும் செய்கிறார். மேலும் வீட்டை விட்டு வெளியேறவும் சொல்கிறார். இதனை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்கின்றனர். அப்போது ஞானமோ நான் எனது அண்ணன் பேச்சைதான் கேட்பேன். அவர்தான் எனக்கு முக்கியம் என கூறிவிட்டு ரேணுகாவை தள்ளிவிட்டு சமையலறைக்குள் போக சொல்கிறார்.

இதையும் வாசிங்க:முதல் பட ஹீரோவை மறக்காத நயன்தாரா!.. புதிய தொழில் தொடங்கியதும் யாரை அழைத்திருக்கிறார் பாருங்க!..

பின் ரேணுகா சமையலறையில் இருந்த அழுது கொண்டிருக்க அங்கிருந்த ஜனனி, நந்தினி ஆகியோ அவளுக்கு ஆறுதல் கூறுகிறனர். இவ்வாறாக இன்றைய எபிசோட் நிறைவடைந்தது. ஆதி குணாசேகரன் வருவாரா இல்லையா என்பது கேள்விகுறியாகவே இருந்து வருகிறது.

Published by
amutha raja