Categories: Cinema News latest news throwback stories

‘மண்வாசனை’ படத்தின் ரியல் க்ளைமாக்ஸ் இதுதான்!.. பாரதிராஜாவுக்கு வந்த நெருக்கடியால் க்ளைமாக்ஸை மாற்றிய சம்பவம்..

1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘மண்வாசனை’. இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி மக்கள் மனதை வென்ற படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்த படமாக கருதப்பட்டது.

இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினுசக்கரவர்த்தி, காந்திமதி போன்ற ஏராளமான நடிகர்கள் நடிக்க இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டத்தட்ட 9 பாடல்கள் கொண்ட படமாக அமைந்தது. படத்தில் இருந்த அனைத்துப் பாடல்களும் செம ஹிட் ஆனது.

bharathiraja

படம் வெளியான நாள்முதல் இந்த படத்தில் அமைந்த பாடல்கள் தான் அனைவரது இல்லத்திலும் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. படத்தில் அழகான காதல் கதையுடன் கிராமம் கொண்டுள்ள பகையை அழகாக சித்தரித்துக் காட்டியிருப்பார் பாரதிராஜா. படத்தின் கிளைமாக்ஸ் படி வினுசக்கரவர்த்தி ரேவதியை தூக்கிக் கொண்டு போக அதை பார்த்து காந்திமதி பெரிய ஈட்டியை வைத்து வினுசக்கரவர்த்தியை குத்த ஓடுவார்.

இதையும் படிங்க :இது சிவக்குமார் ஹீரோவா நடிச்ச படம்… ஆனால் எங்க தேடுனாலும் அவர் இருக்கமாட்டாரு… ஏன் தெரியுமா??

ஆனால் அதை வினுசக்கரவர்த்தி பிடிங்கிக் கொண்டு காந்திமதியை குத்தப்போகும் போது பட்டணத்தில் இருந்து ஒரு பொண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருப்பார் பாண்டியன். காந்திமதியை குத்தப் போகும் போது இடையில் அந்த மிலிட்ரி பொண்ணு வந்து விழ கத்திக் குத்து அந்தப் பொண்ணு மீது பட்டு இறந்து விடுவாள்.

bharathiraja

இதுதான் படத்தின் இப்போதைய க்ளைமாக்ஸ். ஆனால் பாரதிராஜா வைத்திருந்ததோ கடைசியில் ரேவதியும் பாண்டியனும் இறக்குற மாதிரி காட்டியிருப்பாராம். அதனால் படத்தின் மற்ற டெக்னீசியன்ஸ்கள் அனைவரும் பாரதிராஜாவின் க்ளைமாக்ஸால் ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க :ஹீரோக்களை திருப்திப்படுத்த தயாரிப்பாளர்கள் இந்த மாதிரிலாம் பண்றாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!

மேலும் பாரதிராஜாவிடமும் சோகமான க்ளைமாக்ஸ் வேண்டாம், ஹேப்பியான க்ளைமாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூற மறுத்துவிட்டாராம். அதன் பின் படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் சொல்லி மாற்ற சொல்லியிருக்கின்றனர். தயாரிப்பாளர் என்ற முறையில் இல்லை, சித்ரா லட்சுமணனுக்கு தான் தெரியுமாம் பாரதிராஜாவிடம் எப்படி சொன்னால் வேலை நடக்கும் என்று.

bharathiraja chithra lakshmanan

அவர்கள் நினைத்தமாதிரியே மறு நாள் க்ளைமாக்ஸை மாற்றிவிட்டாராம் பாரதிராஜா. அதுமட்டுமில்லாமல் க்ளைமாக்ஸ் மாற்றிய கடுப்பில் அந்த க்ளைமாக்ஸுக்கு தேவையான 300 நபர்களை எப்படியாவது திரட்டி வாருங்கள் என்று ஒரு டாஸ்க்கும் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

நமக்கு க்ளைமாக்ஸ் தான் முக்கியம் என்று நினைத்த அசிஸ்டெண்ட் இயக்குனர்கள் அவர் சொன்னமாதிரி பக்கத்து கிராமத்தில் இருந்த மக்களை எல்லாம் ஒன்று திரட்டி அழைத்துக் கொண்டும் வந்திருக்கின்றனர். இந்த தகவலை அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்தவரும் இப்போது இயக்குனராக இருக்கும் மனோஜ் குமார் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini