×

அந்த பொடிப்பையனுக்கு அத்தன கோடியா? - நடிகர் மேல் காண்டாகும் ஒல்லி நடிகர்

 
அந்த பொடிப்பையனுக்கு அத்தன கோடியா? - நடிகர் மேல் காண்டாகும் ஒல்லி நடிகர்

அப்பாவால் அறிமுகமானலும், அண்ணன் இயக்குனரால் நடிகரானவர் அந்த ஒல்லி நடிகர். தனது திறமையான நடிப்பால் கமல்ஹாசன் ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்பட்டார். ஒருபக்கம் மசாலா பாடம், ஒரு பக்கம் கலைப்படம் என மாறி மாறி நடித்து உண்மையிலேயே திறமையை நிரூபித்தவர். தமிழ், ஹாலிவுட், ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான அசுரத்தனமான படமும், சிவாஜியின் பழைய படத்தின் பெயரை கொண்ட படமும் வசூலை வாரிக்குவித்துள்ளது.

ஒருபக்கம், டிவி தொகுப்பாளாராக இருந்து நடிகராக மாறியவர் சிவ நடிகர். தொடக்கத்தில் அவருக்கு ஒல்லி நடிகர்தான் கை கொடுத்தார். கமல் மகளுடன் ஜோடி போட்டு நடித்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் அவரது சொந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அதன்பின் சிவ நடிகர் தனக்கென ஒரு ரூட்டை பிடித்து முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது ரூ. 22 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

ஆனால், ஒல்லி நடிகரின் சம்பளம் ரூ. 15 லிருந்து 18 கோடி வரை மட்டுமே நிற்கிறது. எனவே, நண்பர்களுடன் பார்ட்டி பண்ணும் போது ‘ஹாலிவுட் வரைக்கும் போயிட்டேன். ஆனா, அந்த பொடிப்பையன் சம்பளத்தை என்னால வாங்க முடியலயே’ என மப்பில் செம காண்டாக தன் கவலையை கொட்டி வருகிறாராம் அந்த ஒல்லி நடிகர்...

பல் இருக்குறவன் பக்கோட திங்குறான்.. சினிமாவுல இதலாம் சகஜமப்பா...

அந்த நடிகர் யார்னு உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க!...

From around the web

Trending Videos

Tamilnadu News