Connect with us
kamal (1)

Cinema News

‘மம்மி’ பட கெட்டப் மாதிரி இருக்கே! கல்கி படத்துக்காக கமலுக்கு முதலில் போட இருந்த கெட்டப்.. வைரலாகும் புகைப்படம்

Actor Kamal: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் அமிதாப்பச்சன் தீபிகா படுகோன் கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD.  மிகப் பிரம்மாண்டமாக தயாரான இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 700 கோடி அளவில் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே ஒரு மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் பாகுபலி, ஆர்ஆர்ஆர், கே ஜி எஃப் போன்ற படங்களை மிஞ்சும் அளவுக்கு இந்திய சினிமாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போன படமாகவும் இந்த கல்கி திரைப்படம் அமைந்திருக்கிறது. படத்திற்கான பிரமோஷன் சிறப்பாக நடந்த நிலையில் அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு காரணமானது .

இதையும் படிங்க: கேட்டதும் கொடுத்த ரஜினி! கேட்காமல் வந்து உதவி செய்த அஜித்.. ஆர்.வி.உதயகுமார் சொன்ன ப்ளாஷ்பேக்

படத்தில் லீடு ரோலில் நடித்த பிரபாஸ் தீபிகா படுகோன் அமிதாப்பச்சன் கமல்ஹாசன் ஆகியவர்களின் கெட்டப்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. அதுவும் இதுவரை இல்லாத அளவு கமல் இந்த கெட்டப்பில் வித்தியாசமாக காணப்பட்டார். இது குறித்து ஏற்கனவே ஒரு செய்தி வைரலானது. அதாவது இந்த படத்தில் கமல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவில் தனது கெட்டப் இருக்க வேண்டும் என கமல் நாக் அஸ்வினிடம் கேட்டதாகவும் இருவரும் இணைந்து இந்த கேரக்டர் லுக்கை உருவாக்கியதாகவும் ஒரு பேட்டியில் கமல் தெரிவித்திருந்தார். அவர்கள் நினைத்ததைப் போல இந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.

supreme

supreme

இதையும் படிங்க: திணறிய கண்ணதாசன்!. தட்டித் தூக்கிய அந்த இளைஞன்!.. வியந்து போன எம்.எஸ்.வி!..

சுப்ரீம் என்ற பெயரில் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக முதலில் கமல் போட இருந்த ஒரு கெட்ட ப் பற்றிய புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அது ஹாலிவுட் படமான மம்மி படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த ஒரு கதாபாத்திரத்தின் லுக்கை போலவே அந்த கெட்டப் இருக்கிறது. அந்த புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகின்றது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top