×

பைக்கில் சென்ற பெண்ணை உரசிய இளைஞர் – வெளுத்து வாங்கிய மக்கள் !

சென்னையில் பைக்கில் அமர்ந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அந்த பெண் தனது நண்பருடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.

 

சென்னையில் பைக்கில் அமர்ந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அந்த பெண் தனது நண்பருடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.

சென்னையில் உள்ள சாலி  கிராமத்தைச் சேர்ந்த பெண் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அலுவலகம் முடிந்ததும் அவர் தன் நண்பர் ஒருவருடன் வீட்டுக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்த நபர் ஒருவர் அவர்களின் பைக் அருகே நெருங்கி அந்த பெண் மீது கைவைத்து உரசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ந்த அந்த பெண் சத்தம் போட்டு அலற மர்மநபர் பைக்கில் வேகமாக செல்ல முயன்றுள்ளார். ஆனால் விடாத அந்த பெண்ணின் நண்பர் அவரைத் துரத்தி எம் எம் டி ஏ காலணி அருகே பிடித்துள்ளார். நடந்த சம்பவத்தைக் கேள்விபட்ட பொதுமக்களும் அந்த நபரை போட்டு வெளுத்து வாங்கியுள்ளனர்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்டு விரைந்த வடபழனி காவலர்கள் அந்த இளைஞனை மக்களிடம் இருந்து மீட்டு கைது செய்துள்ளனர். விசாரணையில் முரளிகிருஷ்ணன் என்ற அந்த நபர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கமாண்டோ தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News