
Cinema News
சாவித்திரியை பார்க்க இப்படி எல்லாம் பண்ணுவாரா? ஜெமினியை பற்றி இயக்குனர் ஸ்ரீதர் பகிர்ந்த சீக்ரெட்..
Published on
By
தமிழ் திரையுலகில் ஒரு காதல் தம்பதியாக மக்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்பவர்கள் ஜெமினி கணேசன் சாவித்திரி ஜோடி தான். ஜெமினிகணேசன் சினிமாவிற்குள் வரும்போதே ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் சாவித்திரி அவர் மீது அளவு கடந்த காதல் வைத்திருந்தார். இருவருமே ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
savi1
அழகான ஜோடி
ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் ஒன்றாக நடித்து வந்தனர். நடிகையர் திலகமாக சாவித்திரி தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டார். சிவாஜி எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக ஒரு மூன்றாவது தரம் வாய்ந்த நடிகராக ஜெமினி கணேசன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க : யாரும்மா நீங்கலாம்!. எப்படா நீங்கலாம் திருந்துவீங்க!.. மாவீரனை நக்கலடித்த புளூசட்ட மாறன்!..
ஆனால் சாவித்திரியின் நடிப்பிற்கு எந்த ஒரு நடிகையாலும் ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் காலகட்டத்தில் வந்த சரோஜாதேவி கூட சாவித்திரியை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சிவாஜிக்கு அடுத்தபடியாக தன்னுடைய நடிப்பின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் சாவித்திரி. ஜெமினியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இரு இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் கே பாலச்சந்தர்.
savi2
ஜெமினிக்கு யானை பலம்
ஜெமினியின் பல ஹிட் படங்களுக்கு சொந்தக்காரர்களாக இவர்கள் இருவர்தான் காரணமாக இருந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஸ்ரீதர் உடன் ஜெமினி கணேசனுக்கு ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது. ஸ்ரீதர் தன்னுடைய கட்டுரையில் ஜெமினிகணேசனை பற்றி சில சுவாரசியமான தகவல்களை எழுதி இருக்கிறார். அதாவது அவர் இயக்கிய படங்களில் நடிக்கும் போது ஸ்ரீதரே எதிர்பார்க்காத அளவுக்கு ஜெமினி கணேசனின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்குமாம்.
மேலும் ஸ்ரீதரும் ஜெமினியும் பழகி வந்த நாட்களில் சாவித்திரியை காதலித்து வந்தாராம் ஜெமினிகணேசன். அப்போது ஸ்ரீதருக்கே தெரியாமல் மறைந்து மறைந்து சாவித்திரியை போய் சந்தித்து விட்டு வருவாராம் ஜெமினி கணேசன். அவர்கள் இருவரும் ஒரு பிரபலமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தபோது அவர்கள் இருவரையும் வைத்து ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தை எடுக்க நினைத்தாராம்.
savi3
நடிக்க முடியாமல் போன காரணம்
ஆனால் அந்த சமயத்தில் ஜெமினியும் சாவித்திரியும் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததாலும் இருவரும் சேர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்துக் கொண்டு இருந்ததாலும் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகு தான் தேவிகா, கல்யாண் ஆகியோரை வைத்து நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை எடுத்தாராம் ஸ்ரீதர்.
இதையும் படிங்க : கையில் பத்து ரூபாய்!.. சென்னைக்கு ரிக்ஷாவில் வந்து இறங்கிய இளையராஜா!.. பாரதிராஜா சொன்ன சீக்ரெட்!..
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...
இளம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Leo, coolie ஆகிய இரண்டு படங்களாலும் அருக்கு இருந்த...