குழந்தை குட்டிகளுடன் ஜாலியா கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஜெனிலியா!
நடிகை ஜெனிலியாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
Sun, 27 Dec 2020

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து பெரும் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. தமிழில் நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி , சித்தார்த் , தனுஷ் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.
குறுப்புத்தனமாக நடிப்பதில் பெயர் போன நடிகை ஜெனிலியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்து பெயர் போன நடிகை ஜெனிலியா ரித்தீஷ் தேஷ்முக் என்ற பிரபல பாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை ஜெனிலியாவின் கணவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.