×

மோடி சொல்லும்படி செய்யுங்கள் – அறிவிப்பு வெளியிட்ட கோலி !

நாளை மக்கள் அனைவரும் மோடி சொல்வதைப் போல, வீட்டுக்குள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

 

நாளை மக்கள் அனைவரும் மோடி சொல்வதைப் போல, வீட்டுக்குள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வருவதை அடுத்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நேற்று முன் தினம் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய  மோடி’ மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டுக்குள் இருந்து சுய ஊரடங்கை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் விராட் கோலி தனது சமூகவலைதள பக்கத்தில் ‘இந்த நேரத்தில் நமக்கு தேவைப்படுவது பின்பற்றுவதும், அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுவதும்தான். அதனால் வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்யமாக இருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News