Categories: Cinema News latest news

விஜயின் குரலுக்கு இவ்ளோ விலையா? ‘கோட்’ படத்தில் நடக்கும் பஞ்சாயத்து.. மாட்டிக்கிட்டு முழிக்கும் ஏஜிஎஸ்

GOAT Movie: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் அவ்வப்போது தனது அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் லைலா, பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் கோட் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தப்பான விஷயத்துக்கா க்ளாப் தட்டுனோம்!… தப்பாச்சே… இதை நீங்க கவனிச்சீங்களா?

ஏற்கனவே அஜித்தை வைத்து ஒரு தரமான படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இந்தப் படத்தின் மூலம் மேலும் ஒரு சம்பவத்தை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு நேற்று அஜித்தின் 63 வது பட போஸ்டர் வெளியானதும் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

விரைவில் கோட் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் அது மிகவும் வொர்த்தாக இருக்கும் என்றும் பதிவேற்றி இருந்தார். அதிலிருந்தே ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

இதையும் படிங்க: உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் பெரிய அளவில் பல கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் எல்லா படங்களிலும் விஜய் ஒரு பாடலை கண்டிப்பாக பாடுவார். அதே போல் இந்த படத்திலும் அவர் குரலில் ஒரு பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்ற காரணத்தினால் பெரிய அளவில் அந்தப் பாடல் ரீச் ஆகும் என்ற நினைத்தே டி சீரீஸ் இந்த படத்தின் ஆடியோ உரிமையை 24 கோடி தொகையில் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதால் தனது வலைதள பக்கத்தில் மட்டுமே இந்த பாடலை நாங்கள் ஒளிபரப்பு செய்வோம் என்று சன் பிக்சர்ஸ் கூறி வருகிறதாம். ஆனால் டி சீரிஸ் அந்தப் பாடலை அவர்களுடைய யூடியூப் வலைதளத்தில் பதிவிட்டு பெரும் லாபத்தை எடுக்க நினைத்தார்கள். இதில் சன் பிக்சர்ஸ் சாட்டிலைட் உரிமையை வாங்கி இருப்பதால் நாங்கள் தான் இந்த பாடலை ஒளிபரப்பு செய்வோம் என்று டி சீரிஸ் உடன் மல்லுக்கு நிற்கின்றதாம்.

இதையும் படிங்க: படத்தோட கதை லஞ்சம் வாங்கக் கூடாது.. ஆனா படத்துக்காக நான் கொடுத்த லஞ்சம்! சமுத்திரக்கனி ஆவேசம்

இந்த பஞ்சாயத்து தான் இப்போது ஓடிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையில் டி சீரிஸ் கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் இடம் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதால் ஆடியோ உரிமையை வெறும் 15 கோடி கொடுத்து நாங்கள் வாங்குகிறோம் என அந்த தொகையை குறைத்து கேட்கின்றதாம். இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் இந்த செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini