ajith1
Actor Ajith: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருக்கிறார். ஆரம்ப காலங்களில் அவர் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் எல்லாமே அவர்கள் ரசிகர்கள் உட்பட அனைவருக்குமே தெரிந்த விஷயம். அவருடைய கொள்கைகளும் மற்றும் நடிகர்களிடமிருந்து சற்று வித்தியாசமாகவே இருக்கின்றன. ரசிகர்களை பார்ப்பதில்லை.
ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளக்கூடாது. அடிக்கடி பொதுவெளியில் செல்லக்கூடாது என்பதை தன் குறிக்கோளாகவே வைத்திருக்கிறார். அதனாலேயே அவருடைய ஒரு புகைப்படம் இணையத்தில் வெளிவந்தால் கூட அதை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அவருடைய விடாமுயற்சி படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இதையும் படிங்க: நடிகையை ஏமாற்றி நடிக்க வைத்த சசிக்குமார்… அட அந்த சூப்பர்ஹிட் படமா?
ஏனெனில் துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் வெற்றியை அடைந்தது. அடுத்து விடாமுயற்சி படத்தின் மீதும் அந்த அளவு வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனிடையில் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் ஆரம்பமானது. இந்த நிலையில் இன்று அவருடைய ஒரு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. கலர்ஃபுல்லான சட்டையுடன் கை முழுவதும் டாட்டூவுடன் பார்ப்பதற்கே வித்தியாசமாக கெட்டப்பி காணப்படுகிறார். வேறெந்த படத்திலும் இல்லாத ஒரு கெட்டப்பில் இந்த திரைப்படத்தில் காட்சியளிக்கிறார் அஜித். அதனால் இது எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என்று இப்போது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: நீச்சல் குளத்திலேயே ஃபுல் மீல்ஸ்!.. தண்ணிக்குள்ள கன்னி சிலை!.. ஐஸ்வர்யா மேனன் என்னம்மா இருக்காரு!..
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…