தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கலைஞர்களில் முக்கியமானவர் கவுண்டமணி. இவரது காமெடி கவுண்டர்களை பட்டி டிங்கரிங் பார்த்து தான் தற்போதைய காமெடி நடிகர்கள் நடித்து வருகிறார்கள் என்பதே உண்மை.
கவுண்டமணியும் செந்திலும், சேர்ந்தாலும் சரி, அல்லது கவுண்டமணி ஹீரோவுடன் சேர்ந்தாலும் சரி ஈவு இரக்கமில்லாமல் கலாய்ப்பது தான் கவுண்டர் ஸ்டைல். நடிப்பில் எவ்வளவு கலகலப்பான ஆளோ, அதற்கு அப்படியே எதிர்மாறாக சம்பள விஷயத்தில் மிகவும் கறாரான ஆளாம்.
ஆம், முன்னடி எல்லாம் டப்பிங் பேசி முடிப்பதற்குள் முழு சம்பளமும் கைக்கு வந்துவிட வேண்டும் என காரார் காட்டுவார்களாம். அப்படி சம்பளம் தரப்படவில்லையானால் டப்பிங் முழுதாக பேசமாட்டாராம்.
இதையும் படியுங்களேன் – விருதுகளை குவித்து வரும் குக் வித் கோமாளி.! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
ஒரு முறை, சம்பள பாக்கி, ஒரு தயாரிப்பாளர் தரவேண்டி இருந்ததாம். ஆனால் டப்பிங் பேச வந்துவிட்டாராம். ஓவ்வொரு ரீல் டப்பிங் பேசி முடித்ததும் வீட்டிற்கு போன் போட்டு சம்பளம் வந்தததா என கேட்பாராம். அப்படி இறுதியாக அவர் பேசி முடிக்கும் முன்னர் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
அதனை எண்ணி பார்க்கும் போது அதில் சில கிழிந்த நோட்டுகள் இருக்கவே, உடனே கவுண்டமணி ,தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, அந்த கிழிந்த நோட்டுகளை மாற்றி தாருங்கள் என கூறிவிட்டாராம். இவ்வளவு சம்பளம் கொடுத்ததும், சில கிழிந்த நோட்டுக்காக இவ்வளவு கறாராக இருக்கிறாறே என அந்த தயாரிப்பாளர் நொந்து கொண்டாராம். இருந்தாலும், உழைத்த பணத்தை எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என கவுண்டமணி நினைத்தாரோ என்னவோ யாருக்கு தெரியும்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…