இரத்த காயங்களுடன் ஜிபி முத்து… புகாரில் திடுக்கிடும் தகவல்!

 
இரத்த காயங்களுடன் ஜிபி முத்து… புகாரில் திடுக்கிடும் தகவல்!

ஜிபி முத்து:

சினிமா கனவை பல வருடங்களாக சுமந்து கொண்டு இருந்த கொண்டிருந்தவர்களுக்கு சமூக வலைதளங்கள் கொடுத்த வரப்பிரசாதம் தான் டிக் டாக் இதில் சினிமாவில் நடிகராக வேண்டும் என கனவு கண்டிருந்த பல பேருக்கு நடிகர் நடிகைகள் ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இரத்த காயங்களுடன் ஜிபி முத்து… புகாரில் திடுக்கிடும் தகவல்!

அந்த வகையில் ஜிபி முத்து என்பவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருந்து கொண்டு YouTube மற்றும் டிக் டாக் மூலம் புகழ்பெற்றவர் தான் ஜி பி முத்து.

கோவில் பிரச்சனை:

தொடர்ச்சியாக இவரை தொலைக்காட்சியில் கூட பார்க்க முடிந்தது. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து பிரபலமான யூடியூபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்று என்னவென்றால் தன்னுடைய வீட்டின் அருகில் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறதாம்.

அந்த கோவில் ஜி பி முத்துவின் வீட்டுக்கும் தெருவுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டப்படுவதாக கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஜி பி முத்து மாவட்ட கலெக்டர்… அதிகாரியிடம் மனு வழங்கி வந்திருக்கிறார்.

இரத்த காயங்களுடன் ஜிபி முத்து:

இரத்த காயங்களுடன் ஜிபி முத்து… புகாரில் திடுக்கிடும் தகவல்!

இதனால் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறதாம். இந்த நிலையில் தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி சில நுழைந்து தகராறு செய்ததாகவும் அதை தட்டி கேட்டபோது தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியதாக ரத்த காயங்களுடன் ஜி பி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய மகள்களை மிகவும் ஆபாசமான முறையில் பேசியதாகவும் இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அந்த புகாரில் கூறி இருக்கும் ஜி பி முத்து இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web