gv
GV Prakash: சில தினங்களாக பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி இவர்களின் விவாகரத்து பற்றிய செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் பிரிவுக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது பற்றி பல சேனல்கள் சில பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது: ‘புரிதலும் போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமாக இருப்பதனாலயே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையது அல்ல.
இதையும் படிங்க: நான் நடிச்சிருந்தா இன்னிக்கு அந்த ஹீரோ இருந்திருக்க மாட்டார்! நகுல் சொன்ன நடிகர் யார் தெரியுமா?
தங்கள் கற்பனைக்கு வந்ததை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? நாங்கள் இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும் காரணங்களையும் எனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் அனைவரிடத்திலும் கலந்தாலோசித்து பிறகுதான் இருவரும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
gv1
எங்களை பிரபலங்களாக மாற்றியதனாலயோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனிமனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி’ என அந்த பதிவில் கூறி இருக்கிறார் ஜீவி பிரகாஷ்.
இதையும் படிங்க: நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…
Soori: கோலிவுட்டில்…
Vijay: நடிகர்…
Vijay Devarakonda:…