×

மகிழ்ச்சியாக சென்றது வாழ்க்கை… ஆனால் உள்ளே புகுந்த நண்பரால்? சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ !

மகிழ்ச்சியாக சென்றது வாழ்க்கை… ஆனால் உள்ளே புகுந்த நண்பரால்? சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ !

 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தற்கொலைக்கு முன்னதாக பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எனும் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மகேஷ் மற்றும் அருணா. மகேஷ் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அதிகமாக தகராறுகள் எழுந்துள்ளன.

இதற்கு மகேஷின் நண்பர் ஒருவர்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மனைவியைப் பிரிந்த மகேஷ் தனது தாயார் புஷ்பம் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னதாக தனியாக இருக்கும் போது விஷம் குடித்த அவர் உறவினர்களுக்கு போன் செய்து தற்கொலை செய்துகொள்ள போவதாக சொல்லியுள்ளார்.

அவர்கள் அவரைத் தேடி கண்டுபிடித்து அந்த இடத்துக்கு வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் மகேஷ் இறப்பதற்கு முன்பாக பேசிய ஆடியோ ஒன்று கிடைத்தூள்ளது. அதில் நன்றாக சென்றுகொண்டிருந்த தனது குடும்ப வாழ்க்கையை நண்பர் ஒருவர்தான் கெடுத்து விட்டதாக பேசியுள்ளார்

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் மேற்கொண்டு விசாரணை செய்து  வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News