×

தமிழ்சினிமாவில் இப்படி எல்லாம் கூட படங்கள் வந்துள்ளனவா..?

உறவைக் குறிக்கும் படங்கள் 
 
thi

தமிழ்சினிமாவில் அது என்னமோ தெரில...என்ன மாயமோ தெரில....ஒரு தலைப்பைத் தொட்டால் அது சம்பந்தமாக நிறையவே வருகிறது. உறவைக் குறிக்கும் படங்கள் ஏராளமாக நம்மை அறியாமலேயே வந்துள்ளன. என்னமோ ஏதோ என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்...அடேங்கப்பா இவ்வளவு படங்களா என பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில் உங்களுக்காக பிரித்து பிரித்து தரப்பட்டுள்ள உறவுகளைக் கொஞ்சம் பார்க்கலாமா...

உறவு என்ற பெயரிலேயே வரிசை கட்டி வந்த படங்கள் ரெண்டு தான். வரவு நல்ல உறவு, உறவைக் காத்த கிளி. தாய் பெயரில் வந்துள்ள படங்கள் இவை தான்.  தாய் வீடு, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாயா தாரமா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தாய்ப்பாசம் 

கணவன் பெயரில் வந்துள்ள படங்கள் கணவன், கணவனே கண்கண்ட தெய்வம். தங்கை பெயரில் வந்த படங்கள் இவை. என் தங்கை, என் தங்கை கல்யாணி என் தங்கச்சி படிச்சவ, எல்லாமே என் தங்கச்சி, தங்கைக்கோர் கீதம்.

ராஜா பெயரில் வந்துள்ள படங்களைப் பாருங்கள். ராஜா, எல்லாமே என் ராசாதான், என் ராசாவின் மனசிலே, ராஜா ராஜா தான், ராஜாதி ராஜா, ராஜ படை, ராஜ பாட்டை, ராஜ நடை, ராஜா கைய வெச்சா 

தம்பி பெயரிலும்; படங்கள் வந்துள்ளன. தம்பி, சின்ன தம்பி, சின்ன தம்பி பெரிய தம்பி. அண்ணன் பெயரில் வந்த படங்கள் இவை. அண்ணன், என் அண்ணன், எங்க அண்ணன் வரட்டும், அண்ணன் என்னடா தம்பி என்னடா, அண்ணா நகர் முதல் தெரு. மாமா பெயரில் தமிழ் படங்கள் வந்துள்ளன. எங்க மாமா, தாய்மாமன், மாமன் மகள் . மச்சான் பெயரில் என் ஆசை மச்சான்.

அத்தை பெயரில் வந்த படங்கள் என் அத்தை. தாத்தா பெயரில் வந்த படங்கள் என்றால் அது நம்ம இந்தியன் தாத்தாவாகத் தான் இருக்கும். அதேபோல் பாட்டி பெயரில் வந்த படங்கள் பாட்டி சொல்லைத் தட்டாதே, அவ்வை சண்முகி 

உறவுகள் அனைத்தும் சேர்ந்தது தானே ஒரு குடும்பம். சரி. இந்த குடும்பம் என்ற பெயரில் தமிழ்சினிமாவில் படம் உள்ளதா என்று பார்த்தால் அட அட அதிலும் இடம் உண்டு. ஆம்... குடும்பம் பெயரில் வந்த படங்கள் என்று எடுத்துக்கொண்டால், குடும்பம் ஒரு கதம்பம், பெரிய குடும்பம். இன்னும் சில உறவு பெயர்கள் .... மாப்பிள்ளை பெயரில் மாப்பிள்ளை, மனசுக்கேத்த மகாராசா, மகாராசன், தம்பி ஊருக்கு புதுசு, மாப்பிள்ளை சிங்கம், பொண்டாட்டி தேவை, மனைவி ரெடி, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், என் பொண்டாட்டி நல்லவ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

மேற்கண்ட படங்களில் இருந்து ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு...

கணவன் 

kn

1968ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான படம் கணவன். இப்படத்தில் ஜெயலலிதா எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். என்ன பொருத்தமடி மாமா..., உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன், நான் உயிர் பிழைத்தேன், அடி ஆத்தி நீ யாருக்கு பேத்தி, நீங்க நெனச்சா நடக்காதா, மயங்கும் வயது ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

தாய்வீடு 

இயக்குனர் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனிதா ராஜ், ஜெய்சங்கர், சுஹாசினி, நம்பியார் உள்பட பலர் நடித்த படம். தண்டாயுதபாணி தயாரிக்க சங்கர் கணேஷ் இசை அமைத்த படம். 1983ல் வெளியான இப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டது. ஆசை நெஞ்சே, அழகிய கொடியே ஆடடி, மாமா மாமா ஏன் பார்த்தே, உன்னை அழைத்தது போன்ற பாடல்கள் செம மாஸ். 

ராஜபாட்டை 

விக்ரம் நடிப்பில் 2011ல் வெளியான படம் ராஜபாட்டை. சுசீந்திரன் இயக்கிய இப்படத்தை பிரசாத் வி.பொட்லாரி தயாரித்துள்ளார். விக்ரம் உடன் தீஷா செத், கே.விஸ்வநாத், மயில்சாமி, தம்பி ராமையா, அவினாஸ், ரீமாசென், ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பொடி பையன் போலவே, வில்லாதி வில்லன் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

சின்ன தம்பி 

str

1992ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் சின்ன தம்பி. பிரபு, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. அனைத்துப் பாடல்களும் மெகா ஹிட். தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம், அட உச்சந்தல, குயிலப்புடிச்சி, அரைச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே ஆகிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தன. 

தாய்மாமன் 

1994ல் சத்யராஜ் நடிப்பில் வெளியான நகைச்சுவை படம் தாய்மாமன். இப்படத்தை குருதனபால் இயக்கினார். சத்யராஜ் உடன் மீனா, விஜயகுமார், வடிவுக்கரசி, விஜயசந்திரிகா, சண்முகசுந்தரம், கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், மனோபாலா, அல்வா வாசு உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன்சொட்டு. 

ஆழ சமுத்திரம், அம்மன் கோவில், எங்க குலசாமி, கொங்குநாட்டுக்கு, கேட்டாளே ஒரு கேள்வி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

பாட்டிசொல்லைத் தட்டாதே 

pts

ஏவிஎம் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் 1988ல் வெளியான படம் பாட்டி சொல்லைத் தட்டாதே. இப்படம் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா, எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு வெள்ளி விழா கண்ட வெற்றிப்படம். சந்திரபோஸ் இசையில் படத்தில் மனோரமா பாடிய டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வண்ணத்துப்பூச்சி, சலாம் சடுகுடு, வெத்தல மடிச்சு, வந்தாரு வந்தாரு, சூப்பர் கார் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

From around the web

Trending Videos

Tamilnadu News