Connect with us

Gossips

பழைய பகையெல்லாம் மறந்துடீங்களா ஹரி.?! மீண்டும் சீரும் சிங்கம்.!?

ஆறு சாமி சிங்கம் என கமர்சியல் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். காரணம் இவர் படத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என கலந்து பக்கா என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இவரது திரைப்படங்கள் இருக்கும்.

சூர்யாவிற்கு இவர் இயக்கிய ஆறு, வேல், சிங்கம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. அதிலும் சிங்கம் திரைப்படம் 3 பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஹரி இயக்கிய சாமி படத்தின் இரண்டாம் பாகம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு ஹிட் படத்தை இயக்க வேண்டும் என துடித்த ஹரி மீண்டும் சூர்யாவிடம் கதை சொல்லி ஓகே செய்து இருந்தார். ஆனால், அந்த கதையில் சூர்யாவிற்கு திருப்தி ஏற்படவில்லையாம் அதனால் அந்த படத்திற்கு  சூரிய ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

அதன்பின்னர், இயக்குனர் ஹரி அந்த கதையை அருண் விஜய்யிடம் கூறி “யானை” எனும் பெயரில் படத்தை முடித்து விட்டார். விரைவில் அப்படம் ரிலீஸ் தேதி குறித்து  அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்களேன் …  இனிமே என்ன கூப்பிடாதீங்க.! எனக்கு வேற வேலை இருக்கு.! பருத்திவீரனின் புது கதை.!

இந்நிலையில், இதற்கு அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு இயக்குனர் ஹரி புதிய படம் ஒன்றை இயக்க சம்மதித்துள்ளாராம். ஒருவேளை தனது பழைய கசப்பான அனுபவங்களை மறந்து மீண்டும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு படம் இயக்க ஹரி சம்மதித்துள்ளாரா.?? என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top