×

உயிர் வாழ உதவி செய்யுங்கள்! - நடிகை பெஞ்சமின் கண்ணீர் கோரிக்கை

 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். குறிப்பாக ஆட்டோகிராப் படத்தில் சேரனின் நண்பராகவும், திருப்பாச்சி படத்தில் விஜயின் நண்பராகவும், துபாய் ரிட்டன் வடிவேலுவை கெட்ட வார்த்தையால் சகட்டு மேனுக்கு திட்டி பிரபலமானவர். சமீப காலமாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. எனவே, 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை எடுத்தேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு போதிய வசதி இல்லை. தற்போது பெங்களூரில் உள்ள நாராயண இருதய மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு எவ்வளவு செலவாகிறது என்பது தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள்’ என கோரிக்கை வைத்துள்ளர்.

From around the web

Trending Videos

Tamilnadu News