×

விக்ரம் படத்தின் ப்ரஷ்ஷான தகவல் இதோ...! 

 
vikram2

அரசியலுக்கு வந்ததிலிருந்து கமல் படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டார். என்றாலும், சட்டசபை தேர்தலையொட்டி ஒரு படத்தை வெளியிட்டு அதன் மூலம் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புக்கு தாமதமானது. படமும் நின்று போனது. சட்டசபை தேர்தலில் தன் இருப்பை பதிவு செய்ததில், அவர் ஒரு இடம் கூட பெறவில்லை என்றாலும் ஆங்காங்கே கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே..! இதனால் பெரும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு கூட சில இடங்களில் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், கமல் என்றைக்குமே தோல்வியைப் பற்றி கவலைப்படாதவர். அவரது கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகியபோதும் கூட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு 232வது படம் விக்ரம்;. அரசியல் சாயத்தைக் கலந்து அடிக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்....காரணம் 6 மாதங்களுக்கு முன் வெளியான டீசரில் கமல் விருந்து படைக்கும்போது தலைவாழை இலை போட்டு கறி மற்றும் எலும்புத் துண்டுகள் போட்டு, ஆரம்பிக்கலாமா...என்று அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்பி சொல்லி, இரு கைகளாலும் மறைத்து வைத்திருந்த கோடாரியைத் தூக்கி எதிரே வீசியெறிவதும் பரபரப்பாகிறது. 

தற்போது 4 நாட்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர்; எதிர்பார்ப்பை இன்னும் எகிறச்செய்துள்ளது. ட்ரெய்லரில் இசையை அனிருத் அற்புதமாக அமைத்திருக்கிறார். கமலும் என்ன ஒங்களுக்குத் தெரியும். நிறைய வாட்டி பாத்திருக்கீங்க....உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்...என ஆரம்பித்து....டிரெய்லரின் இறுதியில் ஆரம்பிக்கலாமா...என்பது போல முடிகிறது. இடையில் விஜய் சேதுபதி வந்து வழக்கம்போல தன் பஞ்ச் டயலாக்கை இந்தக் கதைல ராமனும் நான் தான்...ராவணனும் நான் தான் என்று அசால்டாக பேசுகிறார். 
 
விக்ரம் படத்தில் தற்போது மளமளவென நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா அலை குறையத் தொடங்கியதும், படப்பிடிப்பு துவங்கிவிடும் என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர். இப்போது மாஸ்டர் பட இயக்குனர் வந்ததிலிருந்து இந்தப்படத்திற்கு அந்தப்படத்தில் நடித்தவர்களில் ஏற்கனவே வில்லன் வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி இப்படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார். தற்போது பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது. 

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். 

இந்நிலையில் தற்போது விக்ரம் படம் குறித்து ப்ரஷ்ஷான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்...!

From around the web

Trending Videos

Tamilnadu News