Categories: Cinema News latest news

குழந்தை படமா இருக்கும்னு பார்த்தா!.. குழந்தை கொடுக்கிற படமா இருக்கும் போல தெரியுதே!.. என்ன நானி இதெல்லாம்?..

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் நான்னா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் நானி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருனாள் தாகூர் நடித்துள்ளார்.

காதல் வாழ்க்கை பிரிவதும், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதும், குழந்தை பெற்ற பிறகு மீண்டும் பழைய காதலை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் விளைவுகளை அழகான காதல் படமாக உருவாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த மரணம்!. அதிர்ச்சியில் படக்குழு!.. சோதனை மேல் சேதனை…

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான அனிமல் படத்தின் டீசரில் ரன்பிர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா சும்மா உதட்டு முத்தத்தை கொடுத்து ரசிகர்களை உஷ்ணப் படுத்தி வந்த நிலையில், நானி மற்றும் மிருணாள் தாகூர் தற்போது வெளியான டீசரில் ஏகப்பட்ட லிப் லாக் முத்தங்களை கொடுத்து இளம் ரசிகர்களை இம்சை செய்து வருகின்றனர்.

படத்தின் ஆரம்பத்தில் அம்மா இல்லாத பெண் குழந்தை அப்பாவாக நானி வளர்த்து வரும் நிலையில் நானி காதலித்த மிருணாள் தாக்கூர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மனைவி இல்லாத நானி மற்றும் அம்மா இல்லாத நானியின் குழந்தைக்கு அம்மாவாக மாற போராடும் கதையாகவே ஹாய் நான்னா உருவாகி இருப்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

இதையும் படிங்க: இத்தன பேர நடிக்க வச்சும் ஒருத்தரும் வரலயே!. இது என்னடா லியோ புரமோஷனுக்கு வந்த சோதனை!..

வரும் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பேன் இந்தியா படமாக ரிலீசாக போவதாக அறிவித்துள்ளனர்.

Saranya M
Published by
Saranya M