Categories: Cinema News latest news

ஹிப் ஹாப் ஆதி படம் ஹிட்டா?.. ஃபிளாப்பா?..PT சார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள PT சார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இசையமைப்பாளராக ஹிப்ஹாப் ஆதிக்கு இது 25வது படம். ஹீரோவாக ஏழாவது படம். விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி.

இதையும் படிங்க: அன்பே சிவம் படத்துல இதை எல்லாம் கவனிச்சீங்களா? அடடே இவ்ளோ விஷயம் இருக்கா?

ஜெயம் ரவியின் தனி ஒருவன், சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் நடித்து வெளியாகும் படங்களுக்கும் இவர் இசையை விட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் ஆதி நடித்த முதல் படமான மீசைய முறுக்கு படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். அஜித்தின் ரீல் மகள் என்றும் குட்டி நயன்தாரா என்றும் கொண்டாடப்பட்டு வந்த அனிகா சுரேந்திரன் நல்ல நடிகை என்பதையும் இந்த படத்தில் நிரூபித்து காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மகிழ் பத்தி உண்மையை சொல்லியிருந்தால் அவன் லைஃபே காலி! கொந்தளிப்பில் தயாரிப்பாளர்

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகையாக மாறியுள்ளார். அவரைச் சுற்றி தான் இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நேற்று வெளியான PT சார் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 70 லட்சம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு தலைவலியாக மாறிய கங்குவா!.. 300 கோடி பட்ஜெட் கொஞ்சம் மிஸ் ஆனாலும் அக்‌ஷய் பட கதி தான்!..

அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வசூலை இந்த படம் எட்டும் என தெரிகிறது. ஆனால், கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் தேவையை இந்தப் படமும் பூர்த்தி செய்யாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

Saranya M
Published by
Saranya M