×

கொரோனாவை தடுப்பது நம் கையில்!... பொதுமக்கள் செய்ய வேண்டியது இதுதான்!...

 
corono

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை வீசி வருகிறது. எனவே,  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

எனவே, கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  எனவே, தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.  காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் உட்பட எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக நேற்று ஒரு நாள் அனைத்து கடைகளையும் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையே சாதகமாக பயன்படுத்தி நேற்று பொதுமக்கள் பலரும் காய்கறி, இறைச்சி, மளிகை கடைகளை நோக்கி படையெடுத்தனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் பஜார்களில் கூட்டம் அலை மோதியது. துணிக்கடைகள், நகைக்கடைகளில் கூட கூட்டம் அலை மோதியது. இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் கண்டங்களை தெரிவித்தனர்.

அரசு கொரோனாவை தடுப்பதற்காக பல விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், பொதுமக்கள் புரிந்து கொள்ளாமல் நேற்று கூட்டம் கூட்டமாக கூடினர். சென்னை. தி நகரில் அலை மோதிய கூட்டம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு என்னதான் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும், அதை பொதுமக்கள் பின்பற்றினால் மட்டுமே கொரொனாவை கட்டுப்படுத்த முடியும். இது பலருக்கும் புரிவதில்லை. அதன் விளைவுதான் நேற்று பல மாவட்டங்களிலும் பஜார்களில் அவ்வளவு மக்கள் கூட்டம்.

அத்தியாவசியம் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. அப்படி செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அவசியம். கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி அவசியம். வீட்டிற்கு வந்தவுடன் கை, கால், முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த, வரவிடாமல் தடுக்க அரசு சொல்லும் அடிப்படையான வழிமுறைகள். ஆனால், இதை கூடபலரும் பின்பற்றுவதில்லை.

எனவேதான், தினமும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களாகிய நாம் இதை உணர்ந்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும்..

From around the web

Trending Videos

Tamilnadu News