×

கெளதம் மேனனின் ஒரு சான்ஸ் குடு பாடல் மேக்கிங் வீடியோ..!

இயக்குனர் கெளதம் மேனன் நடிகர் சாந்தனு - மேகா ஆகாஷை வைத்து 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார்.  இப்பாடலின் முழு வீடியோ யூடியூபில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

 

கலையரசன் ஹரிகிருஷ்ணன் சாந்தனுவிற்கு நண்பனாக மேகா ஆகாஷனை சமாதானப்படுத்தும் விதம் அருமையோ அருமை. இந்த பாடல் ஜெஸி- கார்த்திக்கை மறக்கும் அளவிற்கு அவ்வளவு அழகாக  இயக்கினார். இந்நிலையில் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் இதன் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாந்தனுவின் டான்ஸ்  அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் இயக்குனர் கெளதம் மேனன் குறும்படம் , வீடியோ பாடல் என தொடர்ந்து குட்டி குட்டி ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். சிம்பு , த்ரிஷாவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக  ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதன் மூலம் ரூ. 20 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News