Categories: Cinema News latest news

சூடு பிடிக்கும் லியோ புரமோஷன்!.. 1000 கோடி டார்கெட். பக்கா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்..

தமிழ் சினிமாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அப்படங்களுக்கு செய்யப்படும் ப்ரோமோஷன்கள் தான். தொடர்ந்து விளம்பரங்களே அப்படத்தின் வெற்றியில் பெரிய பங்கினை வகிக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இருக்கிறது ஜெய்லர். இப்படத்திற்கு நிறைய ப்ரோமோஷன்கள் செய்யப்பட்டது. இருந்தாலும் படத்தின் ரிலீஸே பட்டித்தொட்டி எங்கும் படத்தினை குறித்து பேச வைத்து இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய், அஜித்தை ஓரங்கட்டி ரியல் ஸ்டாராக நிற்கும் ஷாரூக்கான்! ‘ஜவான்’ படத்தால் நிகழப்போகும் அதிசயம்

அந்தவகையில் தீபாவளிக்கு வர இருக்கும் லியோ படத்தின் மீது கவனத்தினை திருப்ப படக்குழு தற்போது அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இன்னும் கிட்டத்தட்ட 60 நாட்கள் படத்திற்கு இருப்பதால் இனி தினமும் படத்தினை குறித்து பேசவைத்தே ஆக வேண்டும்.

இதையும் படிங்க: ‘கைதி 2’க்கு சொந்த அண்ணனே எமனா வந்த கொடுமை! சூர்யாவின் விருப்பத்தை நிறைவேற்றிய கார்த்தி

இதனால் தான் அர்ஜூன் எண்ட்ரி வீடியோ செம ஹைப் கொடுத்து ரிலீஸ் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்தக்கட்ட அனைத்து அறிவிப்புகளுமே வைரலாக்க படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனை வைத்து தான் படத்தின் வசூல் நிர்ணயிக்கப்படும்.

ரஜினியின் ஜெய்லர் படம் 8 தினங்களுக்குள் 500 கோடியை நெருங்கி விட்டது. அதை விட லியோ படம் 1000 கோடியாவது கிடைக்க வேண்டும் என விஜய் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது தீபாவளி சரவெடியாக இருக்கும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily