×

டிக்டாக் காதலர்களோடு ஓட்டம் பிடித்த மனைவியும், மகளும்.. விரக்தியில் கணவர் தற்கொலை...

தங்களின் திறமையை வெளிப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட டிக்டாக் ஆப் பலரின் வாழ்க்கையையும் மாற்றிப்போட்டுள்ளது. டிக்டாக் மூலம் பலரின் வாழ்க்கையும் சீரழிந்துள்ளது. குறிப்பாக பல பெண்கள் இதில் தங்களின் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். 
 

திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி கனகா. இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

இந்நிலையில், கனகாவுக்கும், மகளுக்கும் சில மாதங்களுக்கு முன்பு தனித்தையே டிக்டாக் மூலம் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த ரவி இருரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் மாயமாகினர்.  எனவே, ரவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை கண்டுபிடித்து அறிவுரை கூறி ரவியுடன் அனுப்பி வைத்தனர். ஆனாலும், காதலர்களை மறக்க முடியாத அவர்கள் மீண்டும் அவர்கள் வீட்டிலிருந்து மாயமாகி விட்டனர்.

இந்த முறை அவர்கள் ஈரோட்டில் தங்கள் காதலர்களுடன் இருப்பதை தெரிந்து கொண்ட ரவி அங்கு சென்று தன்னுடன் வந்துவிடுமாறு ரவி அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அவருடன் செல்ல மறுத்துவிட்டனர். மேலும் அவரை அசிங்கப்படுத்தி திட்டியுள்ளனர்.

தன்னையும், தனது மகனையும் அனாதையை விட்டு சென்றதோடு, மகளும்,மனைவியும் தன்னை அவமானப்படுத்தியதால் மன உளைச்சலடைந்த ரவி கண்ணீர் மல்க ஒரு வீடியோவை பதிவிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், மகள் மற்றும் மனைவியை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு பாதுகாப்பாக வைக்கும்படி போலீசாருக்கும் அவர் கண்ணீர் மல்க அந்த வீடியோவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News