Connect with us
gemini

Cinema News

நானும் என்ன பண்ணுவேன்? ‘காதல் மன்னன்’னாக எப்படி மாறினேன் என்பதை ஜெமினியே கூறிய சுவாரஸ்யமான தகவல்

Gemini Ganesan: தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். 50,60களில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்து பெரிய ஹீரோவாக இருந்தவர். அதனால் மூவேந்தர்களாக சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் ஒரே புகழை அடைந்தனர் .

இருந்தாலும் இவர்களில் முதல் வெள்ளிவிழா படத்தை கொடுத்தது ஜெமினி கணேசன் தான். அதுவும் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் வெள்ளி விழாவை எட்டினார். இவரின் ஹேண்ட்ஸமான லுக்கும் அழகும் பெண் நடிகைகளை இவர் பக்கம் இழுத்தது.

இதையும் படிங்க: ‘வெளியே போ’ என விரட்டிய நடிகர்!. குமுறி குமுறி அழுத இயக்குனர் லிங்குசாமி!…

அந்த கால கருப்பு வெள்ளை பட ஹீரோக்களில்  மிகவும் ஹேண்ட்சம்மாக இருந்தவர். இதனால், இளம் பெண்கள் மத்தியில் ஜெமினி கணேசனுக்கு பெரிய கிரேஸ் இருந்தது. இதை அவர் சாதாரணமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான் எப்படி காதல் மன்னனாக மாறினேன் என்பதை ஜெமினியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். என்னுடைய மனைவி பாப்ஜியை பொறுத்தவரைக்கும் வீடு, குழந்தை என அதுதான் அவருக்கு முக்கியம். அதை பார்த்துக் கொள்ளவே என் மனைவி முழு நேரத்தையும் செலவழிப்பார்.

இதையும் படிங்க: ‘லியோ’வில் விஜய் தூக்கிவைத்திருந்த குழந்தை இந்த நடிகையின் மகனா? தோழியை மறக்காத தளபதி

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் கொஞ்சம் வேகமானவன். சினிமாவிற்கு வந்த பிறகு பெண்கள் ஆசைப்படுகிறார்களே என அப்படி இப்படி போக அதுவே பழக்கமாகி என்னை காதல் மன்னனாக்கிவிட்டது.

அதுக்காக ப்ளான் பண்ணி எப்பொழுதும் எதையும் நான் செஞ்சதே இல்லை. ஒரு காலகட்டத்திற்கு பிறகு குடும்பத்திற்கு துரோகம் செய்கிறேனோ? என் மனைவிக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேனோ என்ற எண்ணம் ஏற்பட்டு அதிலிருந்து திருந்த தொடங்கினேன்.

இதையும் படிங்க: வயசு பசங்க பாக்கக் கூடாது!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் தர்ஷா குப்தா..

அந்த உறுத்தல் காரணமாகவே என் மனைவி மற்றும் மகள்கள் கிட்ட அன்பு செலுத்த தொடங்கினேன். அவர்களுடன் அன்போடு பழகிய போது நாம் செய்த தவறுக்கெல்லாம் இது ஒரு பரிகாரம் என என்னுள் நினைக்க தூண்டியது. நான் அன்போடு இருந்ததின் காரணமாகத்தான் இன்றைக்கும் என் குழந்தைகள் எல்லாம் அன்போடு இருக்கிறார்கள். என் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறது என அந்த பேட்டியில் முன்பு ஜெமினி கூறியிருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top