Categories: Cinema News latest news

நானும் இதில் கஷ்டப்பட்டு இருக்கேன்… இரகசியங்களை பகிரும் சைந்தவி…

Saindhavi: பாடகி சைந்தவி தன்னுடைய கணவர் ஜிவி பிரகாஷை விவகாரத்து செய்ய இருக்கும் நிலையில், வாழ்க்கையில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. நான் கஷ்ட விஷயங்கள் என விஷயங்களை பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருந்து, எனக்கும்  பிரச்சினைகள் வரும். அந்த சமயத்தில் நானும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நாம் கஷ்டப்படுவோம் என நினைத்து சிலர்  சொல்லி இருக்க மாட்டாங்க. அது புரிந்துவிட்டது என்றால் அதுக்கு கவனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க:  டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

சந்தோஷம் உங்க கையில் இருக்கிறது. அந்த பவரை வேறு ஒருவருக்கு கொடுத்துவிடாதீர்கள். தொழில்ரீதியாக, நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போது முதல் பாட்டை பாடினேன். அதனால் என்னுடைய சக தோழர்களிடன் கவனம்  கொடுத்தது  எனக்கு பெரிய மாற்றமாக இருந்தது. தனிப்பட்ட மாற்றமாக ஜிவி பிரகாஷை கல்யாணம் செய்துக்கொண்டு வந்தப்பின் உணர்ந்தேன்.

11வது படிக்கும் போது அந்நியன் படத்துக்கு பாடினேன். அதனால் பள்ளி பருவத்தினை சரியாக முடிக்க முடியவில்லை. கல்லூரி படிக்க முதலில் யோசித்தேன். ஆனால் என் அம்மா தான் அது உனக்கு  நல்ல அனுபவமாக இருக்கும் என்றார்கள். அந்த நண்பர்களுடன் இன்னமும் தொடர்பில் தான் இருக்கேன்.

இதையும் படிங்க: ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?

காலேஜ் நிகழ்ச்சியில் பாட்டு போட்டியில்  கலந்துக்கொள்ளவே முடியவில்லை. டெலிவரி முதற்கொண்டு எனக்கு நிறைய சர்ஜரி செய்து இருக்கிறார்கள். இதனால் டயட், உடற்பயிற்சி செய்ய முடியாது. அதனால் தான் வெயிட் போட்டேன். ஆனால் இதை அறியாத சிலர் சாப்பாட்டை குறைக்க சொல்லும் போது அவ்வளவு கடுப்பாக இருக்கும்.

என்னுடைய குடும்பம் ஆரோக்கியத்தில் கவனம் கொடு எனச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த வருடத்தில் என் ஆரோக்கியத்துக்கும், மன நிம்மதிக்கும் முக்கியம் கொடுக்க இருக்கிறேன். நான் எனக்கு என்னை முதலில் பார். பின்னர் மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைக்காதே எனச் சொல்லி கொள்வேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Shamily