Connect with us

Cinema News

ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?

South Indian Divorce: பாலிவுட்டை போல கோலிவுட்டிலும் டைவர்ஸ் செய்திகள் அதிகரித்து விட்டது. பிரபல நடிகர்கள் தொடர்ச்சியாக திருமண பந்தத்தில் இருந்து விலகி தங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றனர். அப்படி தென்னிந்தியாவை உலுக்கிய ஐந்து முக்கிய டைவர்ஸ்கள்.

நாக சைதன்யா மற்றும் சமந்தா ருத் பிரபு:

சமந்தா மற்றும் சைதன்யா சந்தேகமே இல்லாமல் இணையத்தில் பிரபல ஜோடிகளாக வலம் வந்தனர். இத்தம்பதி சமந்தாவின் முதல் படமான ஏ மாயா சேசாவே படத்தில் முதன்முறையாக சந்தித்தனர். உடனே இருவரும் நல்ல நண்பர்களாக மாறி காதலில் விழுந்தனர். சில வருடம் டேட்டிங் செய்து வந்தனர். 2017ம் ஆண்டு இரு மத முறைப்படி திருமணம் செய்தனர்.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

இருவரின் திருமணமும் chaysam என்ற பெயரில் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இருப்பினும், திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021ல், நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிவதாக அறிவித்தனர். காஃபி வித் கரனின் எபிசோடில், சமந்தா இந்த பிரிவு சுமுகமாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி: 

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் 2013ல் பிரபல பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பால்யகால நண்பர்கள். பின்னர் காதலில் விழுந்தனர். அதையடுத்து திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் பல வருடம் கழித்து 2020ல், அவர்களுக்கு மகள் அன்வி பிறந்தார். இருப்பினும், இருவரும் மன நிம்மதியை காரணமாக கூறி தற்போது அதிகாரப்பூர்வமாக விவகாரத்தை அறிவித்து இருக்கின்றனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: 

18 வருட திருமணத்திற்குப் பிறகு, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 2022ல் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இருவராலும் இதுவரை அதிகாரப்பூர்வமான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள் தான் விவாகரத்துக்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இவர்களின் கெமிஸ்ட்ரியை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:  டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து அப்ளே செய்ய மாட்டார்கள் என முதலில் கூறப்பட்டாலும், இந்த ஆண்டு ஏப்ரலில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்யும் பிரிவு 13-பியின் கீழ் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்து இருக்கின்றானர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் மற்றும் ஏஎல் விஜய்:

அமலா பால் மற்றும் ஏ.எல்.விஜய் 2010களில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தனர். 2011ம் ஆண்டு விஜய் இயக்கிய தெய்வ திருமகள் படத்தில் பணிபுரிந்த போது இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக பல வதந்திகள் வந்தன. ஆனால், முதலில் வதந்திகளை இருவரும் மறுத்தனர். ஆயினும்கூட, 2014ல், அவர்கள் தங்கள் உறவை அறிவித்தனர்.

அதை தொடர்ந்து அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.  ஆனால் அவர்களின் திருமணம் குறுகிய காலம் தான் நீடித்தது. 2016ம் ஆண்டு, அமலா பால் மற்றும் ஏ.எல்.விஜய் இருவருக்கும் வாழ்க்கை முறை வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அமலா பால் நடிக்க சென்றது தான் இந்த விவகாரத்துக்கு காரணமாக கூறப்பட்டது. தற்போது இருவரும் வேறு வாழ்க்கையில்  இணைந்துவிட்டனர்.

இதையும் படிங்க: கூலி படத்திலும் இது இல்லையா? அப்போ லோகேஷ் மறுபடியும் பார்முக்கு திரும்பிட்டாரோ…

பிரபுதேவா மற்றும் லதா:

2010 களில் மிகவும் பிரபலமான விவாகரத்து கதை என்றால் பிரபு தேவா மற்றும் அவரது மனைவி லதா உடையது தான். பிரபுதேவா மற்றும் நடிகை நயன்தாரா இடையே காதல் இருந்தது. இருவரும் பொதுவெளியில் அந்த உறவை பகிரங்கமாக காட்டிக்கொண்டனர். விரைவில் திருமண பந்தத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அப்போதைய மனைவி லதாவை பிரபுதேவா விவகாரத்து செய்ய கோரினார். ஆனால் லதா விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததால் சர்ச்சையானது. பிரபுதேவா நயனுடன் உறவில் இருந்ததுக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். பல சர்ச்சைகளுக்குப் பிறகு, பிரபுதேவாவும், மனைவி லதாவும் விவாகரத்து செய்தனர். இருப்பினும், நயன்தாராவுடன் பிரபுதேவா 2011ல் பிரிந்தார். 

google news
Continue Reading

More in Cinema News

To Top