Connect with us

Cinema News

கூலி படத்திலும் இது இல்லையா? அப்போ லோகேஷ் மறுபடியும் பார்முக்கு திரும்பிட்டாரோ…

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் கூலி படத்தில் முக்கியமான ஒரு விஷயத்தினை இல்லாமல் எடுக்க இருக்கிறாராம். ஆனால் அது எப்போதுமே லோகேஷ் படத்தில் டிரேட் மார்க் தானாம். விஜயிற்காக மாற்றிய விஷயத்தினை மீண்டும் ரஜினிக்கு சரி செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தினை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

இதையடுத்து, கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார். எதிர்பாராத அளவு இப்படம் பெரிய அளவில் வெற்றி வசூல் வேட்டை நடத்தியது. அதையடுத்து, விஜயை வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படமும் நல்ல வெற்றி படமாக அமைய அடுத்து லியோ படத்தினை இயக்கினார். லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக லியோ மற்றும் மாஸ்டரில் மட்டுமே நடிகைகளுக்கு இடம் இருந்தது.

தற்போது, ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தினை இயக்க இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஆண்ட்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுவரை லோகேஷ் ஸ்டைலில் வேறு கதையாக அமையும் எனவும் கூறப்படுகிறது. படக்குழு குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை. ஸ்ருதிஹாசனுக்கு தான் முக்கிய ரோல். இது ரஜினிகாந்தின் மகளாக கூட நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கைதி படத்தினை போல கூலி படம் அமையலாம். தெலுங்கு நடிகர் ஒருவர் முக்கிய ரோலில் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top