
Cinema News
எம்.ஜி.ஆர் போட்ட பிச்சைலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்… இப்படி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?…
Published on
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இன்றளவும் மக்கள் மத்தியில் போற்றப்படக் காரணம் அவர் செய்த உதவிகள் தான். எத்தனையோ பேருக்கு அவர்களது கஷ்ட காலத்தில் உதவி செய்துள்ளார். பிரதிபலன் எதுவும் செய்யாமல் அவர் செய்த உதவிகள் தான் அவரை ஒரு மகத்தான மனிதராக மாற்றியது.
அந்த வகையில் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷூக்கு நடந்த வெடிவிபத்தின் போது அவரது காலைக் காப்பாற்றியவரே எம்ஜிஆர் தானாம். அவரது அலுவலகம் வீடு முழுவதும் எம்ஜிஆர் புகைப்படங்களாகவே உள்ளன. நான் இப்போது உயிரோடு இருக்கக் காரணமே எம்ஜிஆர் போட்ட பிச்சை தான் என்கிறார். இதுகுறித்து இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
இதையும் படிங்க… அஜித், விஜயை விட்டு கார்த்திக்கிடம் போனதுதான் பெரிய தப்பு! புலம்பும் தயாரிப்பாளர்
1986ல் நடந்த ஒரு வெடிவிபத்தில் என் கால்கள் 3 துண்டாகி விட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் ஒன்றரை வருஷம் இருந்தேன். எம்ஜிஆர் தான் எல்லா செலவுகளையும் பார்த்தார். டாக்டர்கள் எல்லாம் காலை எடுத்துருமான்னு கேட்டாங்க. நான் கூட ரொம்ப பயந்துட்டேன். எம்ஜிஆர் அதை ஒத்துக்கவே மாட்டேன்னுட்டார். நீங்க இதை ஒரு சேலஞ்சா வைத்து அவன் எப்படி நடப்பானோ, எப்படி ஓடுவானோ அதே போல மாற்றிக் கொடுங்கன்னு கேட்டார். அதன்பிறகு தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன். இது எம்ஜிஆர் போட்ட பிச்சை என்கிறார்.
Sankar Ganesh
1967ல் மகராசி என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ். இவரது திரையுலக வாழ்வில் மைல் கல்லாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... பைக் மெக்கானிக் டூ மாஸ் நடிகர்!.. அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத அரிய தகவல்கள்!..
நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, தாயில்லாமல் நானில்லை, நீயா, டார்லிங் டார்லிங் டார்லிங், ரங்கா, மங்கம்மா சபதம், ஊர்க்காவலன், எங்க சின்ன ராசா உள்பட பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசை அமைத்தவர் சங்கர் கணேஷ் தான். இவர் கடைசியாக இசை அமைத்த படம் பாரம்பரியம். 1993ல் வெளியானது.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...