Categories: Cinema News latest news

பிரசாந்த் இத மட்டும் செய்யவே மாட்டார்.. ‘கோட்’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்! நல்ல ஒரு கொள்கை

Actor Prasanth: தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். 90களில் அஜித், விஜயை பின்னுக்கு தள்ளி ஒரு முன்னணி நடிகராக மிகவும் பிஸியான நடிகராக பிரசாந்த் இருந்தார். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது வெளி நாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக பிரசாந்த் இருந்தார். குறிப்பாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் பிரசாந்த்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பிரசாந்த் இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் அவருடைய மார்கெட் குறைய தொடங்கியது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த பொன்னர் சங்கர் என்ற படம் என பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறினார்.மேலும் அவர் கூறும் போது பொன்னர் சங்கர் படத்திற்காக பிரசாந்த் கிட்டத்தட்ட 5 வருடம் அந்த படத்திற்காகவே உழைத்ததினால்தான் வேறு எந்த படத்திலயும் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்கள் அட்டண்டன்ஸ் போட வாங்க!.. இந்த முறை மிஸ் ஆகாது.. விடாமுயற்சி அப்டேட் எப்போ தெரியுமா?

மேலும் அவருடைய விஷயங்களில் நான் தலையிடுகிறேன் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் கதை கேட்பதில் இருந்து எல்லாமே பிரசாந்த்தான் பார்த்துக் கொள்கிறார். ஷூட்டிங் சமயத்தில் எதாவது ஒரு காட்சியில் நடிக்க வற்புறுத்துகிறார்கள் என்றால் மட்டும்தான் எனக்கு போன் செய்து கொஞ்சம் சொல்லுங்கள் என கூறுவார் என தியாகராஜன் கூறினார்.

கோட் படத்தின் கதை கூட பிரசாந்த்தான் கேட்டார். அவருக்கு கதை பிடித்திருந்தது. மேலும் கோட் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருந்தது. அதனால்தான் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் தியாகராஜன் கூறினார். மேலும் பிரசாந்துக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. அதனால்தான் அவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு சம்மதம் கிடையாது. அப்படியே வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நான் விட மாட்டேன். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பிரசாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என தியாகராஜன் கூறினார்.

இதையும் படிங்க:அட்லீயோட அடுத்த பட டிஸ்கஷன்!.. எந்த ஹீரோ கூட நடத்துறாரு பாருங்க!.. செம வைரலாகுது!..

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini